மணமகனின் தந்தையுடன் மணமகளின் தாயார் திடீர் ஓட்டம்: திருமண வீட்டில் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,January 21 2020]

அடுத்த மாதம் ஒரு திருமணம் நடைபெற இருந்த நிலையில் திடீரென மணமகனின் தந்தையும் மணமகளின் தாயார் ஓடிப் போய்விட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியில் நிச்சயதார்த்தம் முடிந்து பிப்ரவரி மாதம் முதல் வாரம் ஒரு திருமணம் நடக்க இருந்தது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்த போது திடீரென மணமகனின் தந்தையும் மணமகளின் தாயாரும் காணாமல் போனதாக தெரிகிறது.  இருவரையும் தேடி பார்த்த உறவினர்கள் அதன் பின்னர் போலீசில் புகார் அளித்தனர் 

ந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த போது மணமகனின் தந்தையும் மணமகளின் தாயார் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்ததாகவும் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வைர வியாபாரி ஒருவரை மணமகளின் தாயார் திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இருவரும் சந்தித்தபோது பழைய காதல் மீண்டும் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது 

இந்த நிலையில் மணமகனின் தந்தையும் தந்தையும் மணமகளின் தாயார் திடீரென ஓடிப்போய் இருவரும் திருமணம் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர். திருமணம் நடைபெற இன்னும் ஒருசில நாட்களே இருக்கும் நிலையில் இருவரும் திடீரென காணாமல் போனதால் மணமகன்-மணமகள் அதிர்ச்சியில் உள்ளனர்
 

More News

தைரியமாக பேசினால் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை: திரெளபதி இயக்குனர்

உண்மையை தைரியமாக பேசுபவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என சர்ச்சைக்குரிய படம் என்று கூறப்படும் திரெளபதி என்ற திரைப்படத்தை இயக்கிய மோகன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் 

முதல்முறையாக அஜித், விஜய் பாணிக்கு மாறும் சந்தானம்!

தமிழ் திரையுலகை இயக்குனர்களுக்கு கேங்க்ஸ்அர் படம் என்றாலே அது வடசென்னையை பின்னணியாக வைத்து உருவாக்கப்படுவது தான் வழக்கமாக உள்ளது.

பிரபல நடிகருக்கு பெண் எம்பி கேட்ட கேள்வி: பெரும் பரபரப்பு

வரலாற்றை நம்பாத ஒரு நடிகர் எதற்காக தனது மகனுக்கு தைமூர் என்று பெயர் வைக்க வேண்டுமென பெண் எம்பி ஒருவர் பிரபல நடிகரை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

எனக்காக ரோட்டில் படுத்து தூங்குவதெல்லாம் கொஞ்சம் ஓவர்: ரசிகரை கண்டித்த பிரபல நடிகை!

என்னை பார்ப்பதற்காக ரோட்டில் படுத்து தூங்கு போதெல்லாம் கொஞ்சம் ஓவராக தெரிகிறது என பிரபல தமிழ் நடிகை ஒருவர் கூறியிருப்பது கூறியுள்ளார் 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை, தமிழக அரசின் நிலைப்பாடு- பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு என்ன முடிவு எடுத்துள்ளது