புதிய ரூபாய் நோட்டாக வரதட்சணை கொடுக்காததால் நின்று போன திருமணம்

  • IndiaGlitz, [Saturday,November 26 2016]

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் பலவித குழப்பங்கள் நாள்தோறும் நாடு முழுவதும் நடைபெற்று வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் மாப்பிள்ளை வீட்டார் பழைய ரூபாய் நோட்டுக்களை வரதட்சணையாக வாங்க மறுத்ததால் திருமணம் நின்றுபோன சோக சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர் என்ற நகரில் திருமணம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு காரணமாக பழைய ரூபாய் நோட்டுக்களை புதிய ரூபாய் நோட்டுக்களக மாற்றி மணமகன் வீட்டாருக்கு தர வேண்டிய வரதட்சணை பணத்தை புரட்டுவதிலும், மணமகனுக்கு புதிய கார் வாங்கி கொடுப்பதிலும் மணமகள் வீட்டாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

புதிய நோட்டாக வரதட்சணை பணத்தை தராததாலும், புதுக்கார் வாங்கி தராததாலும், திருமணத்திற்கு முந்தைய நாள் மாப்பிள்ளை திடீரென திருமணத்தை நிறுத்திவிட்டார். இதனால் திருமணம் நின்று போன அதிர்ச்சியில் மீளமுடியாமல் மணமகள் வீட்டார்கள் உள்ளனர்.