புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஒரு சாதனை: சென்னை மக்களுக்கு நன்றி சொன்ன போக்குவரத்து காவல்துறை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் சென்னையில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் என்பதும் நள்ளிரவு 12 மணி முதல் விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும் தெரிந்ததே. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஒரு சில இடங்களில் விபத்துக்கள் உள்பட அசம்பாவிதம் ஏற்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்தையே சீர்குலைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ஆண்டு எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு உள்ளதாகவும் இந்த சாதனை மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்ய முடியாது என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘நன்றி சென்னை மக்களே! உங்கள் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. முற்றிலும் அசம்பாவிதம் இல்லாத டிசம்பர் 31ஆம் தேதி இரவு இருந்தது. எந்தவித பெரிய அசம்பாவிதமும் பதிவு செய்யப்படவில்லை. இதனால் அனைவருக்கும் மகிழ்ச்சி’ என்று பதிவு செய்துள்ளது. மேலும் இதே பாதுகாப்பு உணர்வோடு புத்தாண்டு கொண்டாடுவோம் என்றும் அனைவருக்கும் மகிழ்ச்சியான பாதுகாப்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளது.
டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது 20 வயது இளம் பெண் ஒருவர் பலியான சம்பவம் நடந்த நிலையில் சென்னையில் எந்த விதமான அசம்பாவிதமும் இன்றி புத்தாண்டு கொண்டாடப்பட்டது சென்னை மக்களுக்கு பெருமையே என்பது குறிப்பிடத்தக்கது.
Nandri, Chennai!!🙏🏼🤍🌹 🎉 Without your cooperation, this wouldn't have been possible. We had an absolutely incident-free🚫 31st night. Without any major mishap recorded - a record of sorts!
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) January 1, 2023
(1/3) pic.twitter.com/4Qbeq4zCB9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments