மாடலிங் செய்யும் 99 வயது பாட்டி? நெட்டிசன்ஸ் வியக்கும் அசத்தலான புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,August 09 2021]

கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 99 வயது பாட்டி ஒருவர் தன்னுடைய பேத்தியின் பிசினஸ்க்காக மாடலிங் செய்ய துவங்கி இருக்கிறார். இதனால் 99 வயது பாட்டியின் மாடலிங் புகைப்படம் கடந்த சில தினங்களாக இணையத்தை கலக்கி வருகிறது.

கலிஃபோர்னியாவில் வசித்துவரும் லேனி கிரௌவல் என்பவர் சமீபத்தில் பெண்களுக்கான அழகுச் சாதனப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார். “சாய் பியூட்டி“ எனப்படும் தனது தயாரிப்புக்கு விளம்பரம் செய்யவும் அவர் முயற்சி செய்தார். ஆனால் விளம்பர மாடல்கள்களுக்கு தட்டுப்பாடு இருந்த நிலையில் தனது பாட்டியையே தனது பொருளுக்கு விளம்பர மாடலாக ஆக்கிவிட்டால் என்ன என நினைத்து இருக்கிறார்.

இதனால் 99 வயதாகும் தனது பாட்டி ஹெலன் சிமோனை அழகுப்படுத்தி கேமரா முன்பாக அமர வைத்திருக்கிறார். முதலில் ஹெலன் தயக்கம் காட்டினாலும் பின்னர் வெள்ளந்தியான தனது சிரிப்பின் மூலம் பலரையும் ஈர்த்து இருக்கிறார். இதனால் அழகுச்சாதனப் பொருட்களை விளம்பரப்படுத்தும் 99 வயது பாட்டி ஹெலனின் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

99 வயதாகும் ஹெலனுக்கு 11 பேரக்குழந்தைகள் 6 கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாடலாக மாறிவிட்ட ஹெலனைப் பார்த்து அந்த ஒட்டுமொத்தக் குடும்பமும் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.