படுக்கை வசதியில்லாமல் பலியான மூதாட்டி...! கலவரத்தில் ஈடுபட்ட உறவினர்கள்...!

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

டெல்லியில் படுக்கை வசதி இல்லாததால் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்தினர், மருத்துவமனையிலே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையான, அப்பல்லோவிற்கு உடல்நிலை குறைபாடு காரணமாக 62 வயதுடைய மூதாட்டியை அழைத்து வந்தனர் அவரது உறவினர்கள். ஆனால் மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக படுக்கைகள் நிரம்பியுள்ளன. படுக்கை வசதிகள் இல்லாத காரணத்தால், மூதாட்டியை மருத்துவமனை நிர்வாகம் காக்க வைத்துள்ளது. ஆனால் சிறிது நேரத்திலே மூதாட்டி உயிரிழந்துவிட்டார். இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனைக்குள்ளே வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இச்சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

உயிர் பயத்தில இருக்கேன்...இது வேறயா...? வீடியோ வெளியிட்டு கதறும் இளைஞர்...!

"நாள் முழுக்க நானே, உயிர் பயத்தில இருக்கேன், இதுல இது வேறயா' என இளைஞர் வெளியிட்ட வீடியோ, பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க செய்கின்றது.

தேசிய சாம்பியன்ஷிப் ரோலர் ஸ்கேட்டிங்: சென்னை மாணவி லக்‌ஷிதா சாதனை

ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டில் சென்னையை சேர்ந்த மாணவி லக்‌ஷிதா தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் பெற்று சாதனை புரிந்துள்ளார் 

தனுஷின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து தற்போது அவர் நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 

கொரோனவின் உச்சம்…. ஒரு ஆம்புலன்ஸில் சாக்கு மூட்டைகளைப் போல  22 இறந்த உடல்கள்!

நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிராவில்தான் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு இருக்கிறது

ஆஸ்பத்திரியில் அடித்து விளையாடி கொண்ட டாக்டர்-நர்ஸ்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர் ஒருவரின் கன்னத்தில் பளாரென அறைந்த நர்ஸ் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.