117 வயதில் வருமான வரி செலுத்தும் மூதாட்டி: நெகிழ்ந்துபோன வருவமானத்துறை அதிகாரிகள்!!!
- IndiaGlitz, [Tuesday,July 28 2020]
வருமான வரித்துறையின் 160 ஆவது ஆண்டைக் கொண்டாடிய அதிகாரிகள் இந்தியாவில் அதிக வயதுடன் வருமான வரிசெலுத்தும் நபர்களை கௌரவித்து உள்ளனர். நாட்டிலேயே அதிக வருமானம் செலுத்தும் நபராக மத்தியப் பிரதேசத்தை சார்ந்த 117 மூதாட்டி இருந்து வருகிறார். இவர் பெரிய பணக்காரரோ அல்லது நான்கு தலைமுறைக்கு சொத்து வைத்திருக்கும் நபரோ அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சிறிய வைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய வருமானத்திற்கான வருமான வரியை அவர் தவறாமல் செலுத்தி வருகிறார்.
இதுகுறித்து சத்தீஸ்கரின் மண்டல தலைமை அதிகாரி ஏ.கே சவுகான் “மத்தியப் பிரதேசத்தின் மீனா கிராமத்தை சேர்ந்த கிரிஜாபாய் திவாரி நாட்டிலேயே அதிக வயதுடன் தன்னுடைய 117 ஆவது வயதில் வருமான வரியை செலுத்தி வருகிறார்’‘ என பெருமையுடன் தெரிவித்து இருக்கிறார். இவருடன் சேர்ந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ஈஸ்வரி பாய் (103), சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரை சார்ந்த மீனா ரக்சித் (100), மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை சார்ந்த கஞ்சன் பாய் (100) போன்ற அனைவரும் இந்தியாவில் அதிக வயதில் வருமானவரி செலுத்தும் நபர்களாக கௌரவிக்கப் பட்டு இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பெண்கள் என்பதுதான் மிகவும் சிறப்புடைய விஷயமாக பார்க்கப்படுகிறது.