கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பாற்றி ஹீரோவான பாட்டி!

  • IndiaGlitz, [Friday,April 12 2019]

சென்னைக்கு அருகேயுள்ள பூந்தமல்லியில் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை அந்த குழந்தையின் பாட்டி தனது உயிரையும் மதிக்காமல் கிணற்றில் குதித்து காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூந்தமல்லியில் உள்ள கிருபாவதி என்பவரின் பேத்தி அரிபிரியா வீட்டின் முன் இருந்த கிணறு அருகே விளையாடி கொண்டிருந்தது. அப்போது திடீரென எதிர்பாராமல் கிணற்றில் அந்த குழந்தை தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருபாவதி உடனே சற்றும் யோசிக்காமல் கிணற்றுக்குள் குதித்தார். கிணற்றின் உள்ளே வெறும் ஐந்து அடியில் மட்டுமே தண்ணீர் இருந்ததால் குழந்தையை கிருபாவதி தூக்கி கையில் வைத்து கொண்டு பின்னர் தன்னை காப்பாற்றும்படி சத்தம் போட்டார். அவரது சத்தத்தை கேட்டு அங்கு கூடிய பொதுமக்கள் முதலில் புத்திசாலித்தனமாக குழந்தையை வாளியில் கயிறு கட்டி மேலே கொண்டு வந்தனர்.

இருப்பினும் கிருபாவதிக்கு காலில் அடிபட்டிருந்ததால் அவரை மேலே கொண்டு வர பொதுமக்களால் முடியவில்லை. இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த வந்த தீயணைப்புத்துறையினர் கிருபாவதியை பத்திரமாக மேலே கொண்டு வந்தனர். தனது உயிரை துச்சமாக மதித்து பேத்தியின் உயிரை காப்பாற்றி ஹீரோவான கிருபாவதிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

More News

பாடகியாக மாறிய விஜய் டிவி பிரபலம்

விஜய் டிவியில் 'கலக்க போவது யாரு', கிங்ஸ் ஆப் காமெடி, சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பிரியங்கா தற்போது திரைத்துறையிலும் காலடி வைத்துள்ளார்.

என் நண்பன் நிச்சயம் ஜெயித்துவிடுவான்: சமுத்திரக்கனி தேர்தல் பரப்புரை

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளை ஆதரித்து திரையுலகினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில்,

ராகுல்காந்தி முதலில் ஜெயிப்பாரா என்று பார்ப்போம்: கமல்ஹாசன்

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

தோனிக்கு 50% அபராதம்: கூல் கேப்டனையே கடுப்பேத்திய அம்பயர்! 

உலகின் ஜெண்டில்மேன் கிரிக்கெட் கேப்டன் என்றால் அதில் முதலிடத்தில் தல தோனி இருப்பார் என்பது அனைவரும் தெரிந்ததே.

மதுவிலக்கை அமல்படுத்தினால் மாஃபியா பெருகிவிடும்: கமல் சர்ச்சை பேச்சு

தமிழகம் உள்பட நாடு முழுவதும் மதுவினால் பல தாய்மார்களின் தாலி பறிபோவதால் நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற குரல் நாளுக்கு நாள் ஓங்கி ஒலித்து வருகிறது.