தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக்குழுவுக்கு கிராமி விருது.. ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து..!

  • IndiaGlitz, [Monday,February 05 2024]

தமிழ் பாடகர் உள்பட இந்திய இசைக் குழுவின் ஆல்பத்திற்கு கிராமிய விருது கிடைத்துள்ளதை அடுத்து இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசைத்துறையின் உயர்ந்த விருது கிராமி விருது என்பதும் இந்த விருது இந்த ஆண்டு இந்திய இசைக் குழுவுக்கு கிடைத்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த சக்தி என்ற ஆல்பத்திற்கு கிராமிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த ஆல்பத்தை உருவாக்கிய சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், விநாயக் ராம் கணேஷ், ராஜகோபாலன் மற்றும் ஜாகிர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழுவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதில் ஜாகிர் உசேன் மூன்றாவது முறையாக கிராமி விருதை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எட்டு பாடல்கள் அடங்கிய சக்தி ஆபத்திற்கு கிராமி விருது கிடைத்துள்ளதை அடுத்து இசைப்புயல் ஏஆர் ரகுமான் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இன்று அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருது சக்தி ஆல்பத்தின் இசைக்குழுவிற்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.