100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யக் காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்!!! தொடரும் அவலம்!!!

  • IndiaGlitz, [Saturday,June 06 2020]

 

கொரோனா ஊரடங்கினால் உலகமே கடும் பொருளாதார நெருக்கடிக்குள் மாட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கிறது. வேலை கிடைக்காமல் சொந்த மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களுக்கு பிழைப்பை தேதி வந்த நிலையில் கொரோனா வந்து வேலையைப் பறித்து விட்டது. இந்நிலையில் உயிர் முக்கியம் என்று உணர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு இக்கட்டான நிலைமையை கடந்து ஊருக்குப் போய் சேர்ந்து இருக்கின்றனர். ஆனால் கொரோனா நேரத்தில் ஊருக்கு சென்று விட்டால் மட்டும் போதுமா? வாழ்வதற்கு பணம் வேணுமே... தற்போது நெருக்கடி நிலையில் கிடைக்கிற வேலைக்கு செல்வது என்ற முடிவினை தொழிலாளர்கள் மட்டுமல்ல படித்த இளைஞர்கள் கூட எடுத்து இருக்கின்றனர்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் M.BA B.Ed, BBA, MA இதுபோன்ற பட்டங்களை பெற்றவர்களும் சொந்த ஊர்களில் சும்மா இருக்க முடியாமல் குடும்பத் தேவைகளுக்காக தற்போது தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை செய்தவற்கு பெயரை பதிவு செய்திருக்கின்றனர். முன்பு சராசரியாக 20 பேர் என்று இருந்த இடங்களில் தற்போது 100க்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலைத் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இதுவரை இந்தியா முழுவதும் 14 கோடி பேர் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணியாற்றுவதற்கு விண்ணப்பித்து உள்ளனர் என்று அரிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். 14 கோடி பேருக்கும் வருடத்தில் 100 நாட்களுக்கு வேலை தர வேண்டும் என்றால் அரசாங்கத்திடம் 2.8 லட்சம் கோடி பணம் இருக்க வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிக்கேட்டு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை 35 லட்சமாக உயர்ந்து இருக்கிறது எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இத்திட்டத்தின்கீழ் 30 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப் படுகிறது. கொரோனா நேரத்தில் வாழ்வாதாரத்தை தேடி படித்த இளைஞர்கள் சாலைகளை அமைப்பதற்கும், தோட்டங்களில் மண்ணை வெட்டி எடுப்பதற்கும் தயாராகி விட்டார்கள். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளில் இளைஞர்களின் எண்ணிக்கை பொதுவாக அதிகமாக இருக்கும். எனவே ஒவ்வொரு மாநிலமும் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப் பட்டு வருகிறது.

More News

இந்திய கிரிக்கெட்டில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் பென் ஸ்டோக்ஸ் வெளியிட்ட கருத்து!!! குறுக்கே வந்த பாகிஸ்தான்!!!

கடந்த சில தினங்களாக இந்திய கிரிக்கெட் வீரர்களைப் பற்றி பாகிஸ்தான் ஊடகங்கள் தாறுமாறான கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

மொட்டை மாடியில் முத்தம், கணவருடன் ரொமான்ஸ்: பிரபல விஜேயின் சேட்டை

இந்த கொரோனா லாக்டவுன் காலத்தில் திரைப்பட நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் தங்களுடைய கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை

மதுரை சலூன் கடைக்காரர் மகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக முதல்வர்

மதுரையை சேர்ந்த சலூன்கடைக்காரர் மோகன் என்பவரின் மகள் நேத்ரா என்பவர் தனது எதிர்கால கல்விக்காக தந்தை சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சத்தை தனது பகுதியில் ஊரடங்கால் கஷ்டப்படும் ஏழைகளுக்கு

நார்வேயில் ஒரு கிராமமே கடலுக்குள் மூழ்கியது!!! பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ காட்சி!!!

டென்மார்க்கின் கோபன்ஹெகன் மாகாணத்தில் உள்ள ஆல்டா பகுதியில் கடந்த புதன்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.

பொது இடத்தில் அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பெண் உறுப்பினர்!!! நடந்தது என்ன???

டிக்டாக் பிரபலம் மற்றும் பாஜக பெண் உறுப்பினருமான சோனாலி போகாட் விவசாய உற்பத்தி சந்தையில் வேலைப் பார்க்கும் அதிகாரி ஒருவரை பொது இடத்தில் வைத்து செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.