பெங்களூரில் படிப்படியாக வந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தொற்று 2-வது அலையாக உருவெடுத்து பரவி வருவதால் பெங்களூரில் சில கட்டுப்பாடுகள் வந்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் அதிகரித்து வரும் சூழலில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் கட்டுப்பாடுகள் வந்துள்ளது. அந்த வகையில் கர்நாடகா, பெங்களூரில் இதன் தாக்கம் இன்னும் அதிகரித்து வருகின்றது. கர்நாடக மாநில அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
பெங்களூர் நகரத்தில் உள்ள பப்கள் மற்றும் உணவகங்களில் 50% மட்டுமே அனுமதி அளிக்கப்படும். முகக்கவசங்கள், சானிடைசர் மற்றும் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்றுவது அவசியமான ஒன்றாகும். இந்த விதிகளை மீறும் பட்சத்தில், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கொரோனா தொற்று காலம் முடியும் வரை சீல் வைக்கப்படும்.
• 50% உடற்பயிற்சி கூடங்கள் மற்றுமே இயங்க வேண்டும்.
• கர்நாடக மாநிலம் முழுவதும் நீச்சல் குளங்களை பொதுமக்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டிகளுக்கு தயாராகி வரும் நீச்சல் வீரர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று மூத்த நீச்சல் பயிற்சியாளர் ஷ்ரீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.
• அப்பார்ட்மெண்ட்-களில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், புத்துணர்ச்சி மையங்கள் ஆகியவற்றை கட்டாயமாக மூடியிருக்க வேண்டும்.
• வருகின்ற 7-ஆம் தேதி முதல் 50% பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்குகளில் அனுமதிக்கப்படுவார்கள்.
• 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, 10 முதல் 12 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தலாம். ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்களை பங்கேற்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கலாம், ஆனால் வருகைப்பதிவு என்பது கட்டாயமில்லை. மாணவர்கள் தங்கி படிக்கக்கூடிய விடுதிகள் மூடப்படும். ஆனால் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் திட்டமிட்ட படி நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments