சூரரை போற்று: அதிருப்தி அடைந்த நண்பர்களுக்கு ஜிஆர் கோபிநாத் விளக்கம்!

சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகிய சூர்யாவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏற்கனவே இந்த படத்தை ஜிஆர் கோபிநாத் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டி இருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தனது நண்பர்கள் சிலர் இந்த படம் குறித்து அதிருப்தி தெரிவித்ததாகவும் அவர்களுக்காக இந்த விளக்கம் அளிப்பதாகவும் ஜிஆர் கோபிநாத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

சூரரைப் போற்று' திரைப்படம் எனது புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் வாழ்க்கையை உண்மையாகச் சொல்லவில்லை என எனது சில பள்ளி, ராணுவ நண்பர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது திரைப்படம் என்பதற்காக கற்பனை கலந்து எடுக்கப்பட்டிருக்கிறது, அந்த மசாலாவுக்குக் கீழ் நல்ல ஆழமுள்ள விஷயங்களும் உள்ளன என்று அவர்களிடம் விளக்கம் அளித்தேன். என் வாழ்க்கையில் நடந்ததை நடந்தபடியே சொல்லியிருந்தால் ஆவணப்படமாகியிருக்கும்

ஒரு ஹீரோ துணிச்சல் மிக்கவராகத் தெரியலாம். ஆனால் அவரும் பலவீனமானவர் தான். ஹீரோ தனது குடும்பத்திடமிருந்து, மனைவியிடமிருந்து உணர்ச்சி ரீதியில் ஆதரவு தேவை என்பதை இந்த படம் காட்டுகிறது. ஹீரோவின் குழுவில் இருப்பவர்கள் அவரைவிட அதிகமாகவே தியாகம் செய்கின்றனர். ஒரு மனைவியால் தனது கனவை விட்டுக் கொடுக்காமல் கணவரின் லட்சியத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும், தனது சொந்த அடையாளத்தையு இழக்காமல் கணவருக்கு ஆதரவு தருவதோடு அவன் சோர்வடையும் போது அவனுக்கு ஊக்கம் தர முடியும் என்பதை அபர்ணா மூலம் இயக்குனர் சுதா மிக அழகாக காட்டியிருக்கிறார்.

மேலும் இது, ஒவ்வொரு முறை வீழ்ந்த பின்பும் எழுச்சி பெறும் ஒருவரின் கதை. நான் தோல்வியைக் கண்டுவிட்டேன் ஆனால் நான் தோல்வி அடைந்தவன் அல்ல. நான் எப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டுச் செல்கிறேனோ அப்போதுதான் நான் தோற்றுப் போனவன் என ஒருவர் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளும் கதை இது. ஒவ்வொரு முறை விழும் போதும் நான் எழுவேன். இது விடாப்பிடியாக இருப்பதைப் பற்றியது மட்டுமல்ல, நல்லவர்களும் நம்மைச் சுற்றி உள்ளனர், சூரியன் நம் வானத்தில் உதிக்கும், கதவுகள் திறக்கும் என்று நம்புவதும் தான். இதுதான் இந்தத் திரைப்படத்தின் உண்மையான செய்தி. அதை நம்பும்படி, அட்டகாசமாக சூர்யா நடித்துள்ளார். இவ்வாறு ஜிஆர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

More News

மன்றாடிக் கேட்கின்றோம், மனது வையுங்கள்: இயக்குனர் இமயம் வேண்டுகோள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாயார் 30 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார்

போறவங்க, வர்றவங்க எல்லாம் என்னை கலாய்க்குறாங்களே: ஷிவானி புலம்பல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மணிக்கூண்டு டாஸ்க்கை சரியாக விளையாடாத பாலாஜி மற்றும் சுசி ஆகிய இருவரும் இன்று சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில் சிறைக்குள் பாலாஜி இருப்பது அவரை விட ஷிவானிக்குத்தான்

நீட் தேர்வில் ஆட்டோ டிரைவரின் மகன் சாதனை… ஆணை வழங்கி மகிழ்ந்த தமிழக முதல்வர்!!!

இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது

ஒரு அறிவிப்புகூட இல்லாம 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டாச்சா??? அலற வைக்கும் தகவல்!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள்தான் தற்போது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சூரிய ஒளியில் இயங்கும் நடமாடும் இஸ்திரி கடை… 9 வகுப்பு மாணவியின் சர்வதேச சாதனை!!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் வினிஷா உமாசங்கர் எனும் மாணவிக்கு சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ஸ்வீடன் நாட்டு மாணவர் பருவநிலை