விக்ரமன் என்கிட்ட வரமாட்டார், ஏன்னா அவருக்கு பயம்: ஜிபி முத்து
- IndiaGlitz, [Wednesday,January 18 2023]
விக்ரமன் என்கிட்ட வர மாட்டார், அவருக்கு என் மீது பயம் என ஜிபி முத்து பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடை இருக்கும் நிலையில் தற்போது சிறப்பு விருந்தினர்களாக ஏற்கனவே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் உள்ளே சென்றுள்ளனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் வெளியே என்ன நடந்தது என்பதை உள்ளே போட்டியாளர்களிடம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் கசியவிட்டு வரும் நிலையில் ஜிபி முத்து தனது பங்குக்கு சில பில்டப் சம்பவங்களை கூறுகிறார்.
அவர் வெளியே சென்று பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து தான் பேட்டி கொடுத்ததாகவும் அந்த பேட்டி வைரலாகி வருவதாகவும் கூறினார். மேலும் விக்ரமன் தன்னுடன் பேச மாட்டார், அவருக்கு என் மீது பயம், அவர் என்னிடம் பேசினால் பதிலுக்கு பதில் நானும் திருப்பி பேசி விடுவேன் என்றும் தெரிவித்தார்.
ஜிபி முத்து மீது பார்வையாளர்கள் அனைவரும் மரியாதை வைத்திருக்கும் நிலையில் விக்ரமன் குறித்து அவர் இவ்வாறு அவதூறாக பேசியது அவர் மீதான மரியாதையை குறைத்து இருப்பதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ‘தலைவன் ஜிபி முத்து மட்டும் வீட்டில் இருந்திருந்தால் அவரை சட்டியில் போட்டு வருத்திருப்பேன் என்றும் என் தலைவன் இல்லாமல் போய்விட்டாரே என்றும் அசீம் மற்றும் மணிகண்டன் தெரிவித்தனர். அப்போது தனலட்சுமி ’நீங்கள் இருந்திருக்கலாம்’ என்று கூற அதற்கு ஜிபி முத்து, ‘அன்பின் பாசத்தினால் நான் வெளியேறி விட்டேன்’ என்று ஜிபி முத்து கூறினார்.
#Dhana #BoomerMuthu #CringeAzeem #MakkuMani insults #Vikraman. Avar serial la act pannaru nu avar life journey la ae sonnar. Gp muthu ebba nee bite kuduthu #ClownAzeem oda PR channel dha 😂#WinnerVikraman #AramVellum#VoteForVikraman #AbuserAzeem #BiggBossTamil6 #BiggBossTamil pic.twitter.com/a82RZM4s4G
— siva (@winsiva1994) January 18, 2023