close
Choose your channels

சன்னிலியோன் அக்காவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாங்க: டிக்டாக் ஜிபி முத்து ஆதங்கம்

Tuesday, August 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன்னி லியோனுடன் நான் நடிப்பதை அடுத்து வதந்திகளை சிலர் பரப்பி வருவதாகவும் இதனை சன்னி லியோன் அக்கா பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றும் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிக் டாக் மூலம் புகழ்பெற்று அதன்பின்னர் டிக் டாக் தடை செய்யப்பட்டதும் யூடியூபில் மூலம் தற்போது புகழ் பெற்று வருகிறார் ஜிபி முத்து. இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பதும் சன்னிலியோனுக்கு ஜோடியாக அவர் நடித்து வருகிறார் என்றும் கூறப்பட்டு வருகிறாது.

சதீஷ், தர்ஷா குப்தா உள்பட பலர் நடித்துள்ள த்ரில் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தை யுவன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் தயாரித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்கிறார் என்பதும் அவருக்கு ஜோடியாக ஜிபிமுத்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சன்னி லியோன் மற்றும் ஜிபி முத்து குறித்து ஒரு சிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வதந்திகளையும் பரப்ப்பி வருவதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து கூறிய ஜிபி முத்து ’சன்னி லியோன் அக்காவுடன் நான் நடிப்பது பலருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் மோசமான முறையில் சிலர் விமர்சனம் செய்து வருவதாகவும் இதனை சன்னி லியோன் அக்கா பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றும் வேதனையுடன் கூறியுள்ளார். ஜிபி முத்துவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment