சன்னி லியோன் படத்தை எனக்கு காட்டியவர் இவர்தான்: ஜிபி முத்து கலகல பேச்சு!

சன்னி லியோன் என்றால் யார் என்று தனக்கு தெரியாது என்றும் சன்னி லியோன் படத்தை காண்பித்து எனக்கு இவர் தான் என்றும் சென்னையில் நேற்று நடைபெற்ற ’ஓ மை கோஸ்ட்’ இசை வெளியீட்டு விழாவில் ஜிபி முத்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன்னிலியோன் முக்கிய கேரக்டரில் நடித்த ’ஓ மை கோஸ்ட்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் நேற்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சன்னி லியோன், சதீஷ், ரமேஷ் திலக், ஜிபி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய ஜிபி முத்து, ‘நான் இதுவரை திரைப்படங்களில் நடித்தது இல்லை. குறும்படங்கள் மற்றும் டிக்டாக்கில் மட்டும் தான் நடித்து இருக்கிறேன். எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது என்று இயக்குனரிடம் கூறினேன். ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம் நான் சொன்னது போல் நடியுங்கள் என்று இயக்குனர் சொன்னார். நானும் அவர் சொன்னது போலவே நானும் நடித்தேன்.

இந்த படத்தில் சன்னி லியோன் நடிக்கிறார்கள் என்று கூறினார்கள். சன்னி லியோன் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது. அதன் பிறகு சன்னி லியோன் என்றால் யார் என்று எனக்கு ஆனந்த் தம்பி தான் கூறினார். அவர்தான் எனக்கு சன்னி லியோனின் ஒரு சில படங்களையும் எனக்குக் காண்பித்தார் என்று கூறினார்.

ஜிபி முத்து இவ்வாறு கூறியதும் விழாவுக்கு வந்திருந்தவர்கள் கரகோஷம் எழுப்பிய நிலையில் பதறிய ஜிபி முத்து, ‘தயவுசெய்து தப்பாக நினைக்காதீர்கள், சன்னிலியோனின் படம் மட்டும்தான் எனக்கு காண்பித்தார், வேறு எதுவும் நான் பார்க்கவில்லை என்று கூறினார்.

மேலும் சன்னி லியோனுடன் நான் நடித்த காட்சி இந்த படத்தில் இருக்கிறது என்றும் இந்த படத்தில் என்னுடைய கேரக்டர் பெயரை கேட்டவுடன் எனக்கு சிரிப்பு வந்தது என்றும் கண்டிப்பாக நீங்களும் ரசிப்பீர்கள் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனருக்கு நன்றி என்றும் ஜிபி முத்து கலகலப்பாக பேசினார்.
 

More News

9 மாத கர்ப்பிணியான பிரபல சீரியல் நடிகை: வளைகாப்பு புகைப்படங்கள் வைரல்!

 பிரபல சீரியல் நடிகை ஒருவர் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வளைகாப்பு புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன. 

உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள்: எலான் மஸ்க்கை கலாய்த்த தமிழ் நடிகர்!

டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகள் 8 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்த

'தரமான சம்பவம் இருக்குது': ரிலீஸ் ஆனது 'அவதார் 2' படத்தின் டிரைலர்!

 பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான 'அவதார்' திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது என்பதும்

ஜிவி பிரகாஷ்- சைந்தவி பாடிய காதல் ரசம் சொட்டும் பாடல்: வீடியோ வைரல்

 பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது மனைவி சைந்தவியுடன் பாடிய காதல் ரசம் சொட்டும் பாடலின் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

என்ன ஒரு கள்ளங்கபடம் இல்லாத சிரிப்பு: விஜயகாந்த் வீடியோவை வெளியிட்ட யோகிபாபு!

கேப்டன் விஜயகாந்த் கள்ளம் கபடமில்லாமல் சிரிக்கும் வீடியோவை நடிகர் யோகிபாபு வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.