புளூசட்டை மாறனின் அநாகரீகமான விமர்சனம்.. பதிலடி கொடுத்த ஜிபி முத்து..!

  • IndiaGlitz, [Thursday,July 13 2023]

சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் ஒரு திரைப்படத்தை மட்டும் விமர்சனம் செய்யாமல் அந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களை தனிப்பட்ட முறையில் அநாகரிமாக விமர்சனம் செய்வார் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ’பம்பர்’ என்ற திரைப்படத்தை அவர் விமர்சனம் செய்யும் போது ஜி பி முத்துவை பன்னி என அநாகரிகமாக விமர்சனம் செய்த நிலையில் ஜிபி முத்து அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்

’பம்பர்’ என்ற திரைப்படத்தை விமர்சனம் செய்த புளூசட்டை மாறன் அந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனத்தை தான் கொடுத்திருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் அவ்வப்போது ஒரு பன்னி வந்து கொண்டே இருக்கிறது அந்த பன்னியை மட்டும் கொன்று இருந்தால் படம் நன்றாக இருந்திருக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜிபி முத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புளூசட்டை மாறன் படத்தை நன்றாக விமர்சனம் செய்து இருந்தாலும் அவர் யாரை பன்னி என்று சொல்கிறார் என்று எனக்கு தெரியும். ஆனால் அதே நேரத்தில் அந்த பன்னி கடித்தால் என்ன ஆகும் தெரியுமா? என்று எச்சரிக்கை விட்டுள்ளார். மேலும் தேவையில்லாமல் என்னை சீண்டினால் நான் சும்மா விட மாட்டேன் என்றும் அவர் கடுமையாக அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.