ஜிபி முத்து கொலை மிரட்டல் விடுகிறார்....! காதல் சுகுமார் போலீசில் புகார்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
இணைய பிரபலமான ஜிபி. முத்து சமூக வலைத்தளங்கள் வாயிலாக தனக்கு கொலை மிரட்டல் விடுவதாக காதல் சுகுமார் போலீசில் புகாரளித்துள்ளார்.
காதல், திருவிளையாடல் ஆரம்பம் போன்ற ஒருசில படங்களில் துணை நடிகராக நடித்தவர் தான் சுகுமார். இன்று சென்னை காவல் ஆணையத்தில் புகாரளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில் பேசியதாவது,
"கொரோனா காலங்களில் குழந்தைகள் போன் வழியாக கல்வி கற்கிறார்கள். ஆனால் சமூகவலைத்தளங்களில் பிரபலமாக உள்ள இலக்கியா, ஜிபி முத்து போன்றவர்கள் தவறான, ஆபாச வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் அவர்கள் மேல் சர்வதேச மனித உரிமைகள் கவுன்சிலின் மாநில பொதுசெயலாளர் ஏழுமலை, டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். இது பற்றி ஊடகங்களில் நானும் என்னுடைய கருத்தை தெரிவித்திருந்தேன். இதனால் நெல்லை சங்கர், சேலம் மணி மற்றும் ஜிபி முத்து உள்ளிட்டோர் இணையம் வழியாக எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.
ஆபாச வீடியோக்கள் நிறைந்த இவர்களின் சமூக வலைதள பக்கங்களை முடக்க வேண்டும். கொலைமிரட்டல் விட்டவர்கள் மீது போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகுமார் சார்பாக கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com