பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவுடன் ஜிபி முத்து வெளியிட்ட முதல் வீடியோ: என்ன சொல்லியிருக்கார்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து மிகச் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தார் என்பதும் அவரது பெயரில் ஆர்மிகள் ஆரம்பிக்கப்பட்டு அவருக்கு மிகச்சிறந்த ஆதரவை பார்வையாளர்கள் கொடுத்துக் கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக ஜிபி முத்து தேர்வான நிலையில் அவர் கண்டிப்பாக 100 நாட்கள் வரை அந்த நிகழ்ச்சியில் தாக்குப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென தனது மகனை பார்க்க முடியாமல் ஏங்கி வருத்தம் அடைந்த ஜிபி முத்து வீட்டுக்கு போயே தீரவேண்டும் என்று கூறினார். கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் எவ்வளவோ சமாதானப் படுத்தியும் தனக்கு எவ்வளவு பெயரும் புகழும் பணமும் கிடைத்தாலும் அது தேவை இல்லை என் மகன் தான் முக்கியம் என்று கூறி பிடிவாதமாக வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்து தனது வீட்டில் தனது குழந்தைகளுடன் பிரியாணி சாப்பிடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது மகனுக்கு பிரியாணி ஊட்டிய அவர், என்னை பார்க்காமல் ஏங்கிப் போய்விட்டான் என்றும், மெலிந்து போய்விட்டான் என்றும் கூறுகிறார். அதன் பிறகு தனது மகளுக்கும் பிரியாணியை அவர் கொடுக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளன.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன என்பது குறித்து அவர் கூறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுகுறித்து அவர் எதுவுமே கூறவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒப்பந்தத்தின் கெடுபிடி காரணமாக அவர் எதுவும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.
 

More News

Vikram's 61st movie is titled 'Thangalaan' - Deets inside

'Thangalaan' is the title of Vikram's 61st movie. It is directed by Pa.Ranjith of 'Kabali' and 'Kaala' fame. Since the director's films are loved by the Telugu audience a lot, it is going to

Jana Sena suggests the Women's Commission is biased

It is known that, the other day, the Andhra Pradesh Women’s Commission served a notice on Pawan Kalyan for allegedly normalizing divorces during a speech earlier this month. On Sunday, the

13 AP Ministers face the threat of attacks: Report

Last week, YCP leader RK Roja's car was allegedly attacked outside the Vishakhapatnam airport by Jana Sena cadres. Since then, the YCP has been getting offensive in its verbal attacks on

Sundar C's historical fantasy 'Sangamitra' revived - Exciting details

Right after S.S. Rajamouli's 'Baahubali' came and created history and inspired the revival of historicals in Indian cinema our own Sundar C

Here is what Rashmika is gonna do on Diwali

Rashmika Mandanna is currently at the top in her field and she is juggling between cities to complete her schedules