நள்ளிரவில் கதறியழுத ஜிபி முத்து.. தனலட்சுமியை வச்சு செய்ய காத்திருக்கும் ஆர்மி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து நள்ளிரவில் திடீரென கதறி அழுததால் அதிர்ச்சி அடைந்த அவருடைய ஆர்மியினர் தனலட்சுமியை வச்சு செய்ய காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் தொடக்க நாளான கமல்ஹாசனிடம் அறிமுகமான நேரத்தில் இருந்து தற்போது வரை சக போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்தி வரும் ஒரே போட்டியாளர் ஜிபி முத்து என்றுதான் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமி ஆகிய இருவரும் டாஸ்க்கில் ஒரே அணியில் இருந்தாலும் இருவருக்கும் இடையே பிரச்சனை எழுந்தது. மரியாதையாக அழைக்க வேண்டும் என தனலட்சுமி கூறியதை அடுத்து ஜிபி முத்து ’என்னுடைய மகள் வயது இருக்கும் பெண்ணை நான் அக்கா என்று அழைக்க வேண்டும்’ என்று கொந்தளித்தார்.
இதனை அடுத்து அவர் நள்ளிரவில் திடீரென கதறி அழுத நிலையில் அவரை சக போட்டியாளர்கள் ஆறுதல் செய்தனர். ‘நீங்கள் ஒன்றும் தவறு செய்யவில்லை, நடந்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம், நீங்கள் அழுக வேண்டாம், நீங்கள் அழுதால் உங்கள் குழந்தைகள் கவலைப்படுவார்கள்’ என்று அவரை தேற்றினார்.
இந்த நிலையில் ஜிபி முத்து மீது அபாண்டமாக பழி சுமத்தி அவரை கதறி அழ வைத்த தனலட்சுமியை வச்சு செய்ய காத்திருப்பதாக அவரது ஆர்மியினர் தெரிவித்துள்ளனர். தனலட்சுமி எவிக்சன் பட்டியலுக்கு வந்தால் அவரை முதல் நபராக வீட்டுக்கு அனுப்புவோம் என ஏற்கனவே ஜிபி முத்து ஆர்மியினர் சபதம் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Please dont cry???? #GPMuthu #gpmuthuarmy #biggbosstamil #biggbosstamil6 #biggboss6tamil pic.twitter.com/M0Wy11lkoX
— Filmic Reels (@filmic_reels) October 12, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com