close
Choose your channels

ஒன்மேன் ஷோவாக பிக்பாஸ்: கமல்ஹாசனே ரசிக்கும் அளவுக்கு ஜிபி முத்துவின் காமெடி!

Sunday, October 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து சீசன்களும் சீரியசாகவே சென்று கொண்டிருந்த நிலையில் இந்த சீசன் மட்டுமே கலகலப்பாகவும் காமெடியாகவும் உள்ளது என்பதும் அதற்கு முழு காரணம் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

சீரியசான நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தாலும் உடனே அந்த இடத்தை காமெடியாக மாற்றிவிடுகிறார் ஜிபி முத்து. அதுமட்டுமின்றி கமல்ஹாசனே ரசிக்கும் அளவுக்கு அவருடைய காமெடி இருப்பதும், அவருடைய கள்ளங்கபடமில்லாத காமெடியை பார்வையாளர்கள் ரசிப்பதால் அவருக்கு ஆர்மிகள் குவிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய அடுத்த புரமோ வீடியோவில் போட்டியாளர்களின் நண்பர்கள் குறித்து கமல் கேள்வி கேட்கிறார். அதற்கு மகேஸ்வரி தன்னுடைய ஒரே நண்பர் கதிர் என்று கூறுகிறார். இதனை அடுத்து அமுதவாணன் பேசியபோது ’ஜிபி முத்துவிடம் தான் நான் முதல் முறையாக இந்த வீட்டுக்கு வந்த பிறகு பேசினேன். ஆனால் இப்போது அவருடைய நட்பே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் பேசிக்கொண்டே இருக்கிறார்’ என்று கூற அனைவரும் சிரிக்கின்றனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜிபி முத்து, ‘அமுதவாணன் ரொம்ப பாடா படுத்துறான் சார், பேசிகிட்டே இருக்கான் சார்’ என்று சொல்ல கமல் உள்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சியின் வீடியோ சற்றுமுன் வெளிவந்துள்ளது .

மொத்தத்தில் ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்மேன் ஷோவாக மாறி வருகிறார் என்பதும் அவருடைய காமெடியால் தான் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment