உன் கால்ல விழுந்து உன்னை அம்மான்னு சொல்லட்டா.. முற்றும் ஜிபி முத்து - தனலட்சுமி விவகாரம்!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்து ஆரம்பம் முதல் கடைசி வரை ஜாலியாக காமெடி பண்ணுவார் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில் மூன்றாவது நாளே அவர் கதறி அழுக ஆரம்பித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக தனலட்சுமிக்கும் ஜிபி முத்துவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை நீண்டு கொண்டே வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோவில், ‘நான் சாரி என்று சொன்னதற்கே ஒரு முறைப்பு முறைத்தார்’ என்று தனலட்சுமியை ஜிபி முத்து குற்றஞ்சாட்ட அதற்கு தனலட்சுமி, ‘நான் சாதாரணமாக திரும்பி தான் பார்த்தேன், அதை போய் முறைப்பு என்று சொல்கிறார்’ என தனலட்சுமி கூறுகிறார்

மேலும் ’ரொம்ப நடிக்காதீங்க’ என்று தனலட்சுமி கூற உடனே ஆவேசமான ஜிபி முத்து, ‘ நான் என்ன நடிக்கின்றேனா? என் பொண்ணு மாதிரி உன்னை நான் நினைக்கிறேன், என்னை போய் நடிக்கிறேன் என்று சொல்கிறாயே ’ என்று கூறி ’உன் கால்ல விழுந்து உன்னை அம்மான்னு சொல்லட்டுமா’ என்று கூறுகிறார்

இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி தனியாக உட்கார்ந்து அழுகிறார். இன்னொருபுறம் ‘என்னை போய் நடிக்கிறாய் என்று சொல்லி விட்டாரே’ என ஜிபி முத்து மீண்டும் அழுக, அவரை சக போட்டியாளர்கள் தேற்றி வருகின்றனர்

மொத்தத்தில் ஜிபி முத்து - தனலட்சுமி விவகாரம் இப்போதைக்கு முடியாது போல் தெரிகிறது என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.