மைனாவிடம் காதலை வெளிப்படுத்திய ஜிபி முத்து.. விக்ரமன் அடித்த செம கமெண்ட்

  • IndiaGlitz, [Friday,January 13 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி 96 வது நாளாக இன்று ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டுமே மீதம் இருக்கிறது. இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எவிக்ட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் என்ட்ரி ஆகி உள்ளனர் என்பதும் இதனால் பிக்பாஸ் வீடு களைகட்டி உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டில் மீண்டும் என்ட்ரி ஆகியுள்ள நிலையில் அவரது காமெடியால் கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீடே கலகலப்பாக உள்ளது. இவர் இந்த நிகழ்ச்சியில் முழுவதும் இல்லாமல் போய்விட்டாரே என்ற ஏக்கம் பார்வையாளர்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வழக்கம்போல் அமுதவாணன் ஒரு காட்சியை கூறி மைனா மற்றும் ஜிபி முத்து ஆகிய இருவரும் நடிக்க வேண்டும் என்று கூறுகிறார். நீங்கள் இருவரும் காதலிப்பது போன்ற ஒரு காட்சியில் நடியுங்கள் என அமுதவாணன் கூற அப்போது ஜிபி முத்து தனது காதலை மைனாவிடம் வெளிப்படுத்துகிறார்.

ஜிபி முத்து சொன்ன எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட மைனா அதன்பிறகு ’காதலிப்பதற்கு உங்களுக்கு தெரிந்த பையன் யாராவது இருந்தால் சொல்லுங்கள்’ என்று கூற அப்போது விக்ரமன் ’ஜிபி முத்து பையனே இருக்கிறாரே’ என்று கமெண்ட் அடிக்க சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சிரிப்பதுடன் இன்றைய முதல் புரமோ முடிவுக்கு வருகிறது.

More News

தனுஷின் அடுத்த திரைப்படத்தில் இணையும் பிரபலங்கள்.. செம அப்டேட்

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வருவேன்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இந்த வருடம் 'வாத்தி' மற்றும் 'கேப்டன் மில்லர்'

செம ஸ்பீடில் லோகேஷ் கனகராஜ்.. 'தளபதி 67' படத்தின் மாஸ் தகவல்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் ஒரு பக்கம் நேற்று முன்தினம் வெளியாகி வசூலை வாரி குவித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்துக் கொண்டிருக்கும் 'தளபதி 67' படத்தின் படப்பிடிப்பு

பார்த்திபனின் '53ஆம் பக்கம்'.. ரசிகர்களுக்கு பரிசு வழங்குவதாக அறிவிப்பு!

 பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு' மற்றும் 'இரவின் நிழல்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் கவனத்தைப் பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

9 மாதங்களுக்கு பின் திருமணம் நடந்ததை பகிரங்கமாக அறிவித்த 44 வயது நடிகை: கர்ப்பமாக இருக்கின்றாரா?

 பிரபல நடிகை ஒருவர் 9 மாதங்களுக்கு பின் தனக்கு திருமணம் நடந்ததை ஆதாரத்துடன் வெளியிட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

படிச்சு வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்துங்க.. அஜித், விஜய் ரசிகர்களுக்கு டிஜிபி அறிவுரை

இளைஞர்கள் நன்றாக படித்து வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லாத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு