பிரகாஷ்ராஷை கொலை செய்ய திட்டமிட்டோம்: கைதான குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்

  • IndiaGlitz, [Thursday,June 28 2018]

பெங்களூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெண் பத்திரிகையாளார் கவுரி லங்கேஷ் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவர் பிரகாஷ்ராஜ் என்பதும், இந்த கொலைக்கு எதிராக பிரகாஷ்ராஜ் கடுமையாக குரல் கொடுத்தார் என்பதும் தெரிந்ததே. குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் பாஜகவை பிரகாஷ்ராஜ் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.

இந்த நிலையில் எழுத்தாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த தீவிரவாதி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கவுரி லங்கேஷ் கொலை குறித்தும் இந்து அமைப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்த பிரகாஷ்ராஷையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் அதற்குள் போலீசிடம் சிக்கிக்கொண்டதாகவும் அந்த கொலையாளி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: எதிர்த்து குரல் கொடுப்பவர்களை ஒடுக்க திட்டமிடுகிறார்கள். இதனால்என்னுடைய குரல் இன்னும் வலுப்பெறும். இவ்வளவு வெறுப்பரசியலை செய்துவிட்டு நீங்கள் எப்படி தப்பிக்க முடியும்? என்று கூறியுள்ளார்.