ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுமா? மத்திய அமைச்சர் தகவல்
- IndiaGlitz, [Sunday,April 05 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு என அறிவிக்கப்பட்டது. மார்ச் 24ஆம் தேதி தொடங்கிய இந்த 21 நாட்கள் ஊரடங்கு என்பது ஏப்ரல் 14ம் முடிவடைவதால் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் இயல்பு வாழ்க்கை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் ஏப்ரல் 14க்கு பின்னரும் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்கள் கூறியபோது ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பின்னர் பள்ளி கல்லூரிகளை திறப்பதா? என்பது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும் என்றும், ஒருவேளை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந்த விஷயத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால் அரசு இந்த விஷயத்தில் தக்க சமயத்தில் சரியான முடிவு எடுக்கும் என்றும் கூறினார்