மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடா? தமிழக அரசு அதிரடி முடிவு
- IndiaGlitz, [Monday,June 15 2020]
மருத்துவ படிப்பில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்து வந்தது என்பது தெரிந்ததே
இந்த கோரிக்கைகளுக்கு பல அரசியல் கட்சிகளும் ஆதரவு கொடுத்ததை அடுத்து மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்துக் கொண்டது. இந்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்வதற்குவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது என்பதும், அந்த குழு தமிழக முதல்வரிடம் ஆய்வு அறிக்கையை அளித்தது
இந்த ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தில் தமிழக அமைச்சரவை சற்று முன் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அவசர சட்டத்தை அடுத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் மருத்துவர்களாக மாறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு அவசியம் என்ற நிலை ஏற்பட்ட பின்னர் மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையில் இந்த அவசர சட்டம் அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.