உப்புநீரில் ஓடும் பைக் எஞ்சின்: 'ஹீரோ' மதி போல் ஒரு நிஜ கேரக்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் நடித்த ’ஹீரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் மதி என்ற கேரக்டர் உப்புநீரில் எஞ்சின் ஓடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தார். அதை செயல்படுத்தியும் காண்பிப்பார். பெட்ரோல் விற்கும் விலையில் தன்னுடைய தந்தை பெட்ரோல் விலை வாங்க முடியாமல் கஷ்டப்படுவதால் இந்த கண்டுபிடிப்பை கண்டுபிடித்ததாக அவர் கூறியிருப்பார்
இந்த நிலையில் ஹீரோ படத்தில் வரும் மதி போலவே நிஜமாகவே ஒரு மாணவி உப்பு நீரில் பைக் இஞ்சின் ஓடும் என்பதை நிரூபித்து காண்பித்துள்ளார். இந்த கண்டுபிடிப்பு குறித்து அரசுப்பள்ளி மாணவி யோகேஸ்வரி கூறியபோது, ‘பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே இருப்பதால் பொதுமக்கள் மிகுந்த கஷ்டப்படுகின்றனர். பெட்ரோல் வெளிநாட்டில் இருந்து வர வேண்டியது உள்ளது ஆனால் நம் நாட்டிலேயே உப்புநீர் உள்ளது. மக்கள் பயன்பாடு இல்லாமல் இருக்கும் அந்த உப்பு நீரிலிருந்து ஹைட்ரஜனை தனியாக பிரித்து எடுத்தால் எஞ்சினை இயங்க வைக்கலாம் என்பதை நான் கண்டுபிடித்த இருக்கின்றேன். இது நடைமுறைக்கு வந்தால் அனைத்து மக்களுக்கும் பயனாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து யோகிஸ்வரி தாயார் கூறிய போது, பெட்ரோலுக்கு பதில் உப்புநீரில் பைக் ஓடும் என்பதை தான் கண்டுபிடிக்க போகிறேன் என்று எனது மகள் கூறினார். அதை இன்று நிரூபித்து காட்டி சாதித்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
ஹீரோ படத்தில் வரும் மாணவிக்கு நேர்ந்த கொடுமை போல இந்த மாணவிக்கு நேராமல், இந்த மாணவியின் கண்டுபிடிப்பு குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது
உப்பு நீரில் இயங்கும் என்ஜின் ????#PeoplesHERO
— ரகு எஸ்கே (@RaghuSKF) December 24, 2019
@Psmithran@kjr_studios @Siva_Kartikeyan @_Ivana_official @george_dop @AntonyLRuben @Nn84Naganatha pic.twitter.com/h86l4oNJSd
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments