கொரனோ தடுப்பு மருந்து: ஒரு சில மணி நேரங்களில் அறிக்கையை வாபஸ் பெற்ற அமைச்சகம்
- IndiaGlitz, [Monday,July 06 2020]
கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்து 2021 ஆம் ஆண்டுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் ஒரு சில மணி நேரங்களில் அந்த அறிக்கையை திரும்பப் பெற்று உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்தியாவின் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்த COVAXIN என்ற கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் சோதனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் ஐ.சி.எம்.ஆர் சமீபத்தில் அறிவித்தது. ஆனால் இந்த தடுப்பு மருந்தை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது ஆபத்து என்று மருத்துவ வல்லுனர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்
இதனை அடுத்து மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சகம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட COVAXIN, ZYCOV-D ஆகிய இரண்டு தடுப்பு மருந்துகளும் 2021 ஆம் ஆண்டுக்கு முன்னதாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராது என்று தெரிவித்திருந்தது
ஆனால் ஒரு சில மணி நேரங்களில் இந்த அறிக்கையை திரும்ப பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் தொற்றை முடிவுக்குக் கொண்டுவர இந்திய தடுப்பு மருந்துகள் பெரிதும் உதவும் என்று அதற்குப் பதிலாக மற்றொரு அறிக்கையை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது