பட்ஜெட் தாக்கலை அடுத்து தங்கம் விலை குறையுமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2021-2022 பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகக் கூறி இருந்தார். அதன் படி சுங்க வரி மீதான நாப்தா 2.5% குறைக்கப்பட்டு உள்ளது என்றும் மார்ச் 2022 வரை எஃகு ஸ்கிராப் மீதான வரியில் இருந்து விலக்கு அளித்து உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் சில பொருட்களின் மீதான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தை அவர் முன்மொழிந்து உள்ளார்.
இதனால் பட்ஜெட்டில் கூறப்பட்டு உள்ள சுங்க வரியில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றங்களால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி விகிதங்கள் குறையும் என்று நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை சுங்க வரியின் ஏற்றங்களினால் தங்கத்தின் விலை அதிகமாகக் காணப்படுகிறது. தற்போது சுங்க வரியில் சிறிதளவு குறைக்கப்பட்டு இருப்பதால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையிலும் குறைவு இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.
மேலும் இரும்பு, டீசல், காப்பர் பொருட்கள், நைலான் உடைகள் போன்றவற்றின் விலையும் குறையும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. அதேவேளை செல்போன், சார்ஜர், லெதர் ஷு, இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டோ மெபைல் பாகங்கள், மதுபானங்கள், சோலார் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் என்றும் பட்ஜெட்டின் திட்ட அறிக்கையை வைத்து நிபுணர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout