'சர்கார்' படம் ஓடும் திரையரங்குகளில் திடீர் ஆய்வு: முற்றுகிறது நெருக்கடி
- IndiaGlitz, [Thursday,November 08 2018]
விஜய் நடித்த 'சர்கார்' படத்திற்கு அதிமுக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்ததை முதலில் 'மெர்சல்' படத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்ததை போல் சாதாரணமாக பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பாளர் ஒரு கட்சியின் பின்னணியில் இருப்பவர் என்பதால் இந்த முறை படத்திற்கு எதிரான பிரச்சனைகள் பூதாகரமாகியுள்ளது.
'சர்கார்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் என்று வெறும் டுவிட்டரில் மட்டும் பதிவு செய்யாமல், களத்தில் இறங்கிய அதிமுகவினர், இந்த படம் ஓடும் திரையரங்குகள் முன் போராட்டம், விஜய் பேனர்கள் கிழிப்பு, இதனால் காட்சிகள் ரத்து என அதிரடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் 'சர்கார்' படம் ஓடும் திரையரங்குகளில் தற்போது அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. புதுக்கோட்டையில் சர்கார் படம் ஓடும் 3 திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் வந்ததை அடுத்து அந்த திரையரங்குகளில் ஆர்டிஓ தலைமையில் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தால் அந்த திரையரங்குகள் மீது அரசு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பார்கள் என கூறப்படுகிறது. இதனால் 'சர்கார்' படத்திற்கு நெருக்கடி முற்றி வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.