18ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படும், ஆனால்... தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு
- IndiaGlitz, [Friday,May 15 2020]
வரும் 17ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு முடிவடைவததை அடுத்து, அடுத்தகட்ட ஊரடங்கு அதற்கு பின்னரும் தொடரும் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அரசு ஊழியர்கள் குறித்த ஒரு அதிரடி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு முடியும் அடுத்த நாள் முதல், அதாவது மே 18ஆம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் கடந்த ஒன்றரை மாதங்களாக அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டதால் அந்த விடுமுறையை ஈடுகட்ட அரசு ஊழியர்கள் இனி ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும் என தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அதாவது இனிமேல் சனிக்கிழமையும் வேலை நாள் என்று அறிவித்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் அரசு ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு அரசு ஊழியர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடந்த ஒன்றரை மாதங்களாக அரசு அலுவலங்கள் மூடியிருந்ததால் ஏராளமான பணிகள் முடங்கியிருக்கும் இருக்கும் என்பதால் அதனை ஈடுகட்ட தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.