நெல்லை தீக்குளிப்பு மரணம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி உருக்கம்

  • IndiaGlitz, [Tuesday,October 24 2017]

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட நால்வர் தீக்குளித்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பலர் மீளமுடியாத நிலையில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

கந்துவட்டி கொடுமையால் நெல்லையில் நேற்று நடந்த சம்பவத்தை இன்னும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி கூட அந்த குடும்பத்தினர்களுக்கு உதவ முன்வராததை நம்பவே முடியவில்லை. இந்த சம்பவத்திற்கு காரணமான கந்துவட்டிக்காரர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் என்ன பயன்? அந்த நால்வரின் வாழ்க்கை சிதைந்து போயிற்றே!

அரசு அதிகாரிகளே! தயவுசெய்து ஏழைகளின் நிலைமை குறித்து கவனத்தில் கொள்ளுங்கள். அவர்களின் கடைசி நம்பிக்கையாக நீங்கள் மட்டுமே உள்ளீர்கள். இந்த சேவைக்காகவே உங்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது' என்று உருக்கமான வெண்டுகோளை முன்வைத்துள்ளார் ஆர்ஜே. பாலாஜி

More News

அதர்வாவின் அடுத்த படத்தை இயக்கும் வெற்றி பட இயக்குனர்

'செம போதை ஆகாதே', 'இமைக்கா நொடிகள்', 'ருக்குமணி வண்டி வருது', 'ஒத்தைக்கு ஒத்தை' என நான்கு படங்களில் நடித்து வரும் இளையதலைமுறை நடிகரான அதர்வா தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விஷால் 27ஆம் தேதி ஆஜராக வேண்டும்: வருமான வரித்துறை சம்மன்

விஷாலின் அலுவலகத்தில் நேற்று ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்ததாக வதந்தி கிளம்பியது. ஆனால் உண்மையில் நேற்று சோதனை நடத்தியது வருமான வரித்துறை அதிகாரிகள் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது

மெர்சலுக்கு எதிராக வழக்கு, போலீஸ் புகார்: இதற்கு ஒரு முடிவே இல்லையா!

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் பணப்பரிவர்த்தனை குறித்த வசனங்களை கண்டுகொள்ளாமல் இருந்திருந்தால் அந்த செய்தி படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.

அவள்: ஹாலிவுட் படங்களுக்கு இணையாக உறைய வைக்கும் திகில் படம்

பேய்ப்படம் என்றால் பயத்தால் உறைய வைக்கும் காட்சிகள் இருக்கும் என்ற நிலை கடந்த சில வருடங்களாக மாறி பேய்ப்படம் என்றாலே காமெடி படம் என்ற நிலை கோலிவுட் திரையுலகில் ஏற்பட்டுவிட்டது.

கந்துவட்டி கொடுமையால் தீக்குளிப்பு: மூவர் பலி, ஒருவர் உயிர் ஊசல்

கந்துவட்டி கொடுமையால் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை தீக்குளித்த 4 பேர்களில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னொருவர் உயிர் ஊசலாடி வருவதால் அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.