ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசு தடுக்குமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பதில் 

  • IndiaGlitz, [Friday,May 29 2020]

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் திரைக்கு வர தயாராக இருக்கும் ஒரு சில திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரித்த ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜோதிகாவின் நடிப்பு, பார்த்திபனின் நக்கல் கலந்த வசனங்கள், நீதிமன்ற காட்சிகள், இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஏற்படும் திருப்பம், இயக்குனர் ஜெஜெ பெடரிக்கின் திரைக்கதை ஆகியவை மிகச் சிறப்பாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, ராம்ஜியின் ஒளிப்பதிவு இந்த படத்திற்கு பக்க பலமாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியிடுவதால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் இருப்பினும் ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசால் நேரடியாக தடுக்க முடியாது என்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். இதனை அடுத்து திரையரங்குகள் திறக்கப்படும் வரை சின்ன பட்ஜெட் படங்கள் ஓடிடியில் வெளிவர எந்தவித பிரச்சனையும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

மேலும் திரையரங்குகள் திறப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், இதுகுறித்து தமிழக அரசிடமிருந்து விரைவில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

டிக்கிலோனாவின் ஸ்டைலிஷ் 3வது லுக்: பெரும் வரவேற்பு

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன நடிகர் சந்தானம் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'டிக்கிலோனா'.

4 பேர் பயணம் செய்ய ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்!!!

ஊரடங்கு நேரத்தில் இந்தியா முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முயற்சித்து பலர் தங்களது உயிரை இழந்து வருகின்றனர்.

12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு

12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கும் திரைப்படம் ஒன்றில் யோகி பாபு முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளார்

சூர்யா-ஜோதிகா தவறாமல் பார்க்கும் பிரபல நடிகரின் திரைப்படங்கள்

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா, ஜோதிகா, ஒரு பிரபல நடிகரின் திரைப்படங்கள் அனைத்தையும் தவறாமல் பார்த்து விடுவோம் என்று கூறி உள்ளனர் 

இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்தவருக்கு கொரோனா! தனிமைப்படுத்தப்பட்ட போலீசார்

சேலத்தில் இளம் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததோடு, அவர்களை பாலியல் தொழிலுக்கும் கட்டாயப்படுத்தியதாக மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரோனா