'96' இசையமைப்பாளருக்கு கிடைத்த மிகப்பெரிய விருது!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' உள்பட பல திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுக்கு 8வது தாதா சாகேப் திரைப்பட விழாவில் சிறந்த பின்னணி இசைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது. இதனையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்தியாவில் வழங்கப்படும் பெருமைக்குரிய விருதுகளில் ஒன்று தாதா சாகேப் திரைப்பட விழா விருதுகள். இந்த விருது பெற்றவர்களின் பட்டியல் சற்றுமுன் அறிவிக்கப்பட்ட நிலையில் சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான விருதை கோவிந்த் வசந்தா பெற்றுள்ளார்.
சுமேஷ் லால் இயக்கத்தில் உருவான Humans of Someone' என்ற படத்திற்கு சிறப்பாக பின்னணி இசையமைத்ததற்காக கோவிந்த் மேனனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் தான் சிறப்பாக பணிபுரிந்ததாகவும், இந்த படத்தில் வாய்ப்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் கோவிந்த் வசந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
So honored to have won this prestigious award for the "Best Background Score" for Humans of Someone
— Govind Vasantha (@govind_vasantha) May 2, 2019
I can confidently say I made some of my finest pieces of music for this film.
I thank Sumesh Lal and Nitin Nath for bringing me in to this project#dadasahebphalke #filmfestival pic.twitter.com/cTfCxKy3q4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments