சசிகலா பதவியேற்பு குறித்து இந்திய அட்டர்னி ஜெனரல் கூறியது என்ன?
- IndiaGlitz, [Tuesday,February 07 2017]
தமிழக முதல்வராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று காலை 11 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதற்காக சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் தயாரானது. அங்கு போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.
கோவை நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு கவர்னர் வித்யாசாகர்ராவ் சென்னைக்கு திரும்பியதாகவும், இன்று நடைபெறும் பதவியேற்புவிழாவில் அவர் கலந்து கொள்வார் என்றும் முதலில் கூறப்பட்டது.
ஆனால் திடீரென கவர்னர் வித்யாசாகர்ராவ் தனது குடும்பத்துடன் மும்பைக்கு சென்றுவிட்டதாக சற்று முன்னர் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் சசிகலா முதல்வர் பொறுப்பேற்பது தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது. மேலும் சசிகலாவின் பதவியேற்பை முன்னிட்டு சென்னை பல்கலைக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பும் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது.
இந்திய அரசின் அட்டர்னி ஜெனரலுடன் கவர்னர் வித்யாசாகர்ராவ் ஆலோசனை நடத்தியதாகவும், பதவியேற்பில் சட்டச் சிக்கல் ஏதும் இல்லை என்ற போதிலும், ஒருவாரம் காத்திருப்பதில் தவறில்லை என அட்டர்னி ஜெனரல் தெரிவித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.