எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு. ஆட்சி அமைக்கவா? ஆலோசிக்கவா?

  • IndiaGlitz, [Thursday,February 16 2017]

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரவு ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் சற்று முன்னர் அவருக்கு ஆளுனரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.
இன்று காலை 11.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி உள்பட ஐந்து அமைச்சர்கள் தன்னை வந்து சந்திக்குமாறு ஆளுனர் அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆளுனரின் அழைப்பை அடுத்து சற்று முன்னர் கூவத்தூரில் இருந்து கிளம்பினார் எடப்பாடி பழனிச்சாமி
ஆனால் இந்த அழைப்பு ஆட்சி அமைக்கவா? அல்லது மீண்டும் ஆலோசனை செய்வதற்கா? என்று தெரியவில்லை. பெரும்பாலான எம்.எல்.ஏக்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி அணியிடம் இருப்பதால் அவரை ஆட்சி அமைக்கவே ஆளுனர் அழைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஓபிஎஸ் அவர்கள் அணியும் தங்களுக்கு ஆளுனரிடம் இருந்து அழைப்பு வரும் என்று நம்பிக்கையுடன் உள்ளனர்.

More News

விஜய்சேதுபதிக்கு ஜோடியாகும் சிரஞ்சீவியின் உறவினர் நடிகை

விஜய்சேதுபதி-கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் ஓன்றை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி வருகிறார் என்பதையும் இந்த படத்தை அம்மே நாராயணா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

'கெட்டவன்' இயக்குனருக்கு நல்லவன் ஆன சிம்பு

சிம்பு மீது பலவிதமான புகார்கள் திரையுலகில் கூறப்பட்டு வந்தாலும் அவரது தமிழ் உணர்வையும், உதவி செய்யும் மனப்பான்மையையும் அவரது எதிரிகள் கூட பாராட்டுவது உண்டு.

ரஜினி-ரஞ்சித் படம் தொடங்குவது எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தில் நடித்து வருகிறார்.

பவர்பாண்டி' படப்பிடிப்பு முடிவது எப்போது? தனுஷ் தகவல்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய தனுஷ் முதன்முதலில் இயக்கி வரும் திரைப்படம் 'பவர் பாண்டி'.

ஆளுனரை சந்திக்கின்றனர் பன்னீர்செல்வம்-பழனிச்சாமி அணிகள்

கடந்த சில நாட்களாக ஆட்சி அமைப்பது யார் என்ற பரபரப்பான நிகழ்வுகளுக்கு இன்று அல்லது நாளை முடிவு தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வர் போட்டியில் இருந்த சசிகலா சிறைக்கு சென்றுவிட்டதால் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் ஆளுனரின் அழைப்புக்காக காத்திருந்தன...