சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு விருது: மகள் ஐஸ்வர்யா பெற்று கொண்டார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு புதுவை மாநில கவர்னர் விருது வழங்கியதை அடுத்து அந்த விருதை அவரது சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.
இன்று நாடு முழுவதும் வருமானவரி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு வருமான வரித்துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதை புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் வழங்கியதை அடுத்து ரஜினிகாந்த் சார்பாக அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வருமான வரி செலுத்திய நடிகர் ரஜினிகாந்துக்கு விருது வழங்கியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
@LGov_Puducherry @TelanganaGuv @DrTamilisaiGuv felicitating the tax payers including @rajinikanth during the Income Tax Day celebrations at Chennai today. Chief Justice of Madras High Court, Justice Munishwar Nath Bhandari and Pr. Chief Comm of @tn_incometax is also seen pic.twitter.com/9Z4Ojhnwph
— PIB in Tamil Nadu (@pibchennai) July 24, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com