நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநர்… தமிழக அரசின் அடுத்தத் திட்டம்?

  • IndiaGlitz, [Friday,February 04 2022]

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் எனும் கோரிக்கை நீண்டகாலமாக இருந்துவரும் நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் திமுக அரசு பதவியேற்றுக் கொண்டவுடன் சட்டச்சபையில் நீட் தேர்வு விலக்கு கோரும் மசோதாவை நிறைவேற்றியது. இதில் பா.ஜ.க தவிர மற்ற அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்களும் ஒப்புதல் அளித்திருந்தனர். இதனால் நீட் விலக்குக் கோரும் மசோதா தமிழகச் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து நீட் விலக்குக் கோரும் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும்படி தமிழக அரசு ஆளுநருக்கு கோரிக்கை வைத்து அனுப்பியிருந்தது. இந்த மசோதா கிட்டத்தட்ட 4 மாதங்கள் கிடப்பில் போடப்பட்ட நிலையில் நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சபாநாயகருக்கு மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டார். மேலும் இதுதொடர்பாக 2 காரணங்களை ஆளுநர் தமிழக அரசுக்கு தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதில் தமிழ்நாடு அரசு அமைத்த நீட் உயர்மட்ட குழு அறிக்கையையும் அதை அடிப்படையாக வைத்து இயற்றப்பட்ட தமிழ்நாடு அரசின் மசோதாவையும் ஆய்வு செய்தேன். நீட் தேர்வுக்கு முந்தைய காலக்கட்டம் நீட் தேர்வுக்கு பிந்தைய காலகட்டத்தில் மாணவர் சேர்க்கையை ஒப்பிட்டு பார்த்தோம். அப்படி பார்க்கையில் இந்த மசோதா சமூக நீதிக்கு எதிரான மசோதாவாக அறியப்படுகிறது. அதிலும் கிராமத்திலிருந்து வரும் மாணவர்களுக்கும் பொருளாதார ரீதியாக வசதி குறைந்த மாணவர்களுக்கும் எதிரான மசோதாவாக இது உள்ளது.

மேலும் வேலூர் சி.எம்.சி கல்லூரிக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஒரு வழக்கில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் மசோதாவை திருப்பி அனுப்புகிறேன் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

முன்னதாக நீட் தேர்வு விலக்கல் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பக் கோரி திமுக அமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். மேலும் நாடாளுமன்றத்திலும் இதுதொடர்பாக டி.ஆர்.பாலு, ராகுல்காந்தி ஆகியோர் பேசியிருந்த நிலையில் நீட் தேர்வு விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறது. இதனால் தமிழக அரசு நாளை அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அடுத்தக் கட்ட நடவடிக்கைத் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.

மேலும் கல்வி வளர்ச்சிக்கு தடை போடும் நீட் தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது. நீட் தேர்வு தமிழகத்தின் உரிமையை பறிக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நீட் தடையாக உள்ளது. நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மாணவர்களின் நலனைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு ரத்து தொடர்பாக சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் அல்டிமேட்: அடுத்த வார தலைவர் போட்டிக்கு சுரேஷூடன் மோதும் மூவர்!

பிக் பாஸ் அல்டிமேட்  நிகழ்ச்சி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் இதற்கு காரணம் ஐந்து சீசன்களிலும்

கமல்ஹாசனின் 'விக்ரம்' ஷூட்டிங் ஸ்பாட் மாஸ் புகைப்படம்!

ஒருபக்கம் பிக் பாஸ் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, இன்னொருபக்கம் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வது, மற்றொரு பக்கம் நகர்ப்புற உள்ளாட்சி

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா பெற்ற மற்றொரு தமிழ் நடிகை!

கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசாவை இந்திய திரையுலக பிரபலங்களுக்கு வழங்கி வருகிறது என்பதும் அதில் சில தமிழ் திரையுலக பிரபலங்களும் பெற்று வருகிறார்கள்

சுந்தர் சியின் அடுத்த படத்தில் இணைந்த 4வது ஹீரோயின்!

சுந்தர் சி யின் அடுத்த திரைப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடித்து வரும் நிலையில் தற்போது நான்காவதாக ஒரு ஹீரோயின் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

விண்ணில் இருந்து குதித்து சாகசம் செய்த தமிழ் நடிகை: வீடியோ வைரல்

தமிழ் நடிகை ஒருவர் விண்ணில் இருந்து குதித்து சாகசம் செய்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.