பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவினைக் குறித்து ஆளுநர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்

  • IndiaGlitz, [Friday,February 07 2020]

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவைக் குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக நளினி ஆட்கொணர்வு மனு ஒன்றை சமர்ப்பித்து இருந்தார். அந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு இந்த கருத்தினைக் கூறியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன், ஜெயக்குமார், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 28 ஆண்டுகளாகத் தண்டனை பெற்று வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 தேதி தமிழக அரசு இந்த ஏழு பேரை விடுதலை செய்வதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ஆளுநர் விடுதலை தீர்மானத்தை குறித்து எந்த தகவலையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் குற்றவாளிகளுள் ஒருவரான நளினி “தமிழக அரசு கடந்த 2018 இல் எங்களை விடுதலை செய்வதாக அறிவித்து விட்டது. நாங்கள் அத்துமீறி சிறையில் தங்க வைக்கப் பட்டு இருக்கிறோம்” என்கிற ரீதியில் ஒரு ஆட்கொணர்வு மனுவினை சமர்ப்பித்தார்.



இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் வெங்கியப்பன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் “சிறையில் இருந்து கொண்டே ஆட்கொணர்வு மனு அளிப்பது சட்ட விரோதமானது” என வழக்கைத் தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக, மத்திய உள் துணை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலையை நிராகரித்து 2018 லேயே மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. பேரறிவாளன் கருணை மனுவினை ஆளுநருக்கு அனுப்பி உள்ளார். அந்த மனு மீது தமிழக ஆளுநர் சட்டப் பூர்வமாகவும், சுதந்திரமாகவும் முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தார்.

தமிழக அரசு விடுதலை செய்வதாக அறிவித்த தீர்மானத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமலும், மத்திய அரசு விடுதலை தீர்மானத்தை நிராகரித்த நிலையிலும், பேரறிவாளன் சமர்பித்த கருணை மனுவில் ஆளுநர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் எனத் தற்போது தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

நெய்வேலியில் விஜய் ரசிகர்கள் மீது தடியடி: பெரும் பரபரப்பு

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடம் அருகே பாஜகவினர் இன்று மாலை திடீரென குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது 

அம்மா, தம்பியை கத்தியால் குத்திவிட்டு காதலனுடன் டூர் சென்ற இளம்பெண்!

பெங்களூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது தாயையும் தம்பியையும் கத்தியால் குத்திவிட்டு அந்தமானுக்கு காதலனுடன் டூர் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அம்பு எய்தல் போட்டியில் உலக சாதனை செய்து 5 வயதில் 'டாக்டர்' பட்டம் வாங்கிய சிறுமி..!

அம்பு எய்தல் போட்டியில் சிறந்து விளங்கும் 5 வயதுச் சிறுமி சஞ்சனாவுக்கு மும்பையில் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

என்.எல்.சியில் பாஜகவினர் போராட்டம்: விஜய் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு

வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக விஜய் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் விஜய்யிடம் பல மணி நேரம் விசாரணை செய்தனர்

'மாஸ்டர்' படப்பிடிப்புக்கு மீண்டும் வந்த சிக்கல்: கோலிவுட்டில் பரபரப்பு

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர்.