பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவினைக் குறித்து ஆளுநர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம்
Send us your feedback to audioarticles@vaarta.com
ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் கருணை மனுவைக் குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக நளினி ஆட்கொணர்வு மனு ஒன்றை சமர்ப்பித்து இருந்தார். அந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு இந்த கருத்தினைக் கூறியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பேரறிவாளன், ஜெயக்குமார், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் 28 ஆண்டுகளாகத் தண்டனை பெற்று வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 தேதி தமிழக அரசு இந்த ஏழு பேரை விடுதலை செய்வதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை ஆளுநரின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பி வைத்தது. ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் ஆளுநர் விடுதலை தீர்மானத்தை குறித்து எந்த தகவலையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில் குற்றவாளிகளுள் ஒருவரான நளினி “தமிழக அரசு கடந்த 2018 இல் எங்களை விடுதலை செய்வதாக அறிவித்து விட்டது. நாங்கள் அத்துமீறி சிறையில் தங்க வைக்கப் பட்டு இருக்கிறோம்” என்கிற ரீதியில் ஒரு ஆட்கொணர்வு மனுவினை சமர்ப்பித்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் வெங்கியப்பன் தலைமையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் “சிறையில் இருந்து கொண்டே ஆட்கொணர்வு மனு அளிப்பது சட்ட விரோதமானது” என வழக்கைத் தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் தெரிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக, மத்திய உள் துணை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேரின் விடுதலையை நிராகரித்து 2018 லேயே மத்திய அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. பேரறிவாளன் கருணை மனுவினை ஆளுநருக்கு அனுப்பி உள்ளார். அந்த மனு மீது தமிழக ஆளுநர் சட்டப் பூர்வமாகவும், சுதந்திரமாகவும் முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்தார்.
தமிழக அரசு விடுதலை செய்வதாக அறிவித்த தீர்மானத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமலும், மத்திய அரசு விடுதலை தீர்மானத்தை நிராகரித்த நிலையிலும், பேரறிவாளன் சமர்பித்த கருணை மனுவில் ஆளுநர் சுதந்திரமாக முடிவு எடுக்கலாம் எனத் தற்போது தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com