பைரஸியை ஒழிப்பது என் கையில் இல்லை: விஷால் அதிரடி
- IndiaGlitz, [Tuesday,February 05 2019]
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரசி இணையதளங்களை ஒழிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற முறையில் நான் கஷ்டப்பட்டாலும் இது முழுமையாக எனது கையில் இல்லை. மத்திய, மாநில அரசு நினைத்தால் ஒரே நாளில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க இன்று தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விஷால் சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விஷால், 'தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்தால் ஒரே நாளில் ஆன்லைன் பைரஸியை ஒழிக்க முடியும். இதுகுறித்து ஏற்கனவே அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இன்று அதனை வலியுறுத்தியுள்ளோம். அரசாங்கம் இதனை ஒழிக்கும் என்று நம்புகிறோம்.
மேலும் அம்பானி வீட்டு கல்யாணத்தில் கூட சாத்தியமில்லாத ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா இணைந்து இசையமைத்த நிகழ்வு நடக்க பார்த்திபன் அவர்கள்தான் முழு காரணம். அவருக்குத்தான் இந்த பெருமை அனைத்தும் சேரும் என்றும் விஷால் தெரிவித்தார்.