close
Choose your channels

கர்நாடகாவில் 'காலா' வெளியாகுமா? முதல்வர் குமாரசாமி பதில்

Friday, June 1, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை கர்நாடகத்தில் திரையிட கர்நாடக திரைப்பட வர்த்தசபை தடை விதித்துள்ளது. 'காலா' படத்தை திரையிடக் கூடாது என்று 10 கன்னட அமைப்புகள் கடிதம் கொடுத்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் 'காலா' திரைப்படம் கர்நாடகத்தில் திரையிட அரசு முயற்சி செய்யுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி, 'காலா திரைப்படத்தை வெளியிட கர்நாடக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. மக்கள் வேண்டாம் என நினைத்தால் அரசு தலையிடாது; கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ஏற்கனவே காலா திரைப்படம் திரையிட வேண்டாம் என முடிவு எடுத்துவிட்டது. கர்நாடகாவில் காலா படம் வெளியாவதில் கன்னடர்களுக்கு விருப்பம் இல்லை' என்று கூறியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பால் 'காலா' திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது சந்தேகமே என தெரிகிறது. இருப்பினும் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி 'காலா' படத்தை கர்நாடகாவில் திரையிட முயற்சி செய்யப்படும் என கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment