ஆண்ட்ராய்ட் யூசரா நீங்கள்? புது மால்வேர் குறித்து எச்சரிக்கும் மத்திய அரசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆண்ட்ராய்ட் செல்போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை புது மால்வேர் ஒன்று தாக்கலாம் என்றும் அதன் வாயிலாக வங்கி விவரங்களை தெரிந்துகொண்டு வாடிக்கையாளர்களின் பணத்தை திருடுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அரசின் கணினி தொடர்பான நெருக்கடி மேலாண்மை குழு CERT-in எச்சரித்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களின் பணத்தை திருடும் பொருட்டு பல்வேறு சைபர் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக SMS அனுப்பி அதன் வாயிலாக வங்கி விவரங்களைத் தெரிந்து கொள்ளும் முறையை சைபர் குற்றவாளிகள் பல ஆண்டுகாலமாகப் பயன்படுத்தி வந்தனர். பின்னர் மால்வேர் போன்ற புது செயலிகளை உருவாக்கி அந்த செயலியின் லிங்கை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களது வங்கி விவரங்களைத் திருடி, வங்கியில் உள்ள பணத்தை திருடுவது போன்ற குற்றங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
புது மால்வேர் தாக்குதல்
Drinik எனும் செயலியை உருவாக்கிய சைபர் குற்றவாளிகள் அதன் லிங்கை வாடிக்கையாளர்களுக்கு SMS அல்லது Email வடிவில் அனுப்பி வைப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 27 அரசுடைமையாக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களை இந்த மால்வேர் ஏற்கனவே குறிவைத்து விட்டதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன. இதில் இருக்கும் கூடுதல் தகவல் மால்வேர் செயலியில் இருந்துவரும் SMSகள் பார்ப்பதற்கு வருமான வரித்துறையில் இருந்து அனுப்பப்படும்(IT) குறுஞ்செய்தியைப் போலவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆண்ட்ராய்ட் யூசர்கள் கூடுமான வரை தேவையில்லாத SMS களை திறந்து பார்க்கவோ அல்லது இ-மெயில் வழியாக அனுப்பப்படும் லிங்கை க்ளிக் செய்யவோ வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
புது மால்வேர் செயலியை பயன்படுத்தும் சைபர் குற்றவாளிகள் நமது ஆண்ட்ராய்ட் செல்போனுக்குள் நுழைந்து முதலில் பான் கார்டு எண், ஆதார் கார்டு எண், பிறந்த தேதி, செல்போன் எண், வங்கிக்கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி எண், வங்கித் தரவு போன்ற விவரங்களை எளிதாக திருடுவதற்கு வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் கிடைத்துவிட்டால் வங்கியில் இருக்கும் நமது பணத்திற்கும் பாதுகாப்பு இல்லாமல் போய்விடும். எனவே தேவையற்ற SMS மற்றும் இ-மெயில் லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com