லாக்டவுனுக்கு மத்தியில் சென்னை மாநகராட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் தமிழக அரசு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை போன்ற பெருநகரங்களில் சாதாரணமாக நகரக் கட்டமைப்புகளை மேம்படுத்துவது இயலாத காரியம். ஆனால் தற்போது சென்னை மாநகராட்சி முழுவதும் ஆங்காங்கே பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கினால் பிறப்பிக்கப் பட்டுள்ள ஊரடங்கைத் தற்போது சென்னை மாநகராட்சி மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு இருக்கிறது எனப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். நகரின் முக்கியப் பகுதிகளில் பழுதடைந்து கிடக்கும் பாலங்கள், சாலைகள், ஆழமான கட்டமைப்புகளை தற்போது சென்னை மாநகராட்சி துரித வேகத்தில் விரைந்து சரிசெய்து வருகிறது.
இத்திட்டத்தில் முக்கியமான ஒன்று 29 கோடி மதிப்பிலான மாம்பலம் Skywalk திட்டம். இத்திட்டத்தில் பூமிக்கடியில் ஆழமான அடித்தளக் கட்டமைப்புகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்போது பூமிக்கடியில் 42 ஆழமான சுவர்களை அமைக்கும் பணி அப்பகுதியில் நடைபெற்று வருகிறது. அதோடு 6 குவியலான சுவர்களையும் எழுப்பி வருகின்றனர். சாதாரண நாட்களில் இத்தகைய கூம்பு வடிவிலான சுவர்களை அமைப்பது மிகவும் கடினமான காரியமாக இருக்கும். ஆனால் கொரோனா ஊரடங்கு காலத்தில் இப்பணி மிக எளிதாக முடிவடைந்து விடும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
திநகர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மேட்லி சுரங்கப்பாதை திட்டத்திற்கான பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருவதைக் கண்டு பலம் ஆச்சர்யம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வில்லிவாக்கம்-கொளத்தூர் ரயில்வே திட்டப் பணிகளுக்கான அடித்தளம் அமைக்கும் பணியும் மிகத் துரிதமாக நடைபெற்று வருகிறது. அமுதவாயல், பர்மா நகர், வடக்கு பெருங்குடி போன்ற பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகளுக்கான 40 விழுக்காடு அடித்தளக் கட்டமைப்பு பணிகள் முழுவதும் முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் சென்னை மாநகராட்சி இந்த விஷயத்தில் இன்னொரு சவாலையும் சமாளிக்க வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது. தொழிலாளர்கள் அனைவரும் நகரத்தை விட்டு சென்ற நிலையில் அவர்களை திரும்ப அழைத்து வந்தே இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப் பட்டதாகவும் கூறப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout