கொரோனா காலத்திலும் விவசாயிகளின் நலன் காக்கும் தமிழக அரசு!!! அதிரடித் திட்டங்களால் அசத்தும் தமிழக முதல்வர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அளவில் கொரோனாவை சிறப்பாக கையாளும் மாநிலமாகத் தமிழகம் முதலிடம் பெற்றிருக்கிறது. இதனால் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தாலும் கொரோனாவில் இருந்து விடுபடுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தமிழகச் சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் அதிக கொரோனா பரிசோதனை, இணைய ஆலோசனைத் திட்டங்கள், அதிக கொரோனா மையங்கள், பிளாஸ்மா சிகிச்சை என அனைத்து செயல்பாடுகளில் தமிழகம் இந்திய அளவில் முதன்மை பெற்ற மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இத்தகைய தீவிர செயல்பாடுகளினால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடு திரும்பி இருப்பதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா காலத்திலும் விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. அதுகுறித்த விரிவான தகவல்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிரபல பத்திரிக்கைக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனாவின் ஆரம்பக் கட்டத்திலேயே விவசாயிகளின் பிரச்சனைகளைத் திர்ப்பதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
அதில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யும் வகையிலான திட்டங்களை அமல்படுத்துவது, எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ தொழிலாளர்களை பி.டபிள்யூ.டி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் குடிமராமத்து பணிகளுக்குப் பயன்படுத்துவது வரை விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலான பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப் பட்டன எனவும் தெளிவுப்படுத்தினார். மேலும், விவசாய நிலங்களுக்குத் தேவையான தண்ணீரைத் தேக்கும் விதமாக நீர்நிலைகளை பாதுகாக்கும் குடிமராமத்து திட்டம் தமிழகம் முழுவதும் 80% நிறைவடைந்து விட்டது எனக் அமைச்சர் குறிப்பிட்டார். மீதமுள்ள 20% பணிகள் வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாகவே முடிக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
தமிழக அரசு மேற்கொள்ளும் குடிமராமத்து பணிகளால் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வளம் நிறைந்து காணப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டார். அதைத்தவிர ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து கிடைக்கும் உபரி நீர் விவசாய நிலங்களுக்கு உரிய நேரத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி இருக்கிறார். விவசாய நிலங்களில் விளையும் பொருட்களை விவசாயிகள் நேரடியாக நுகர்வோரிடம் எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது, இதற்காக பல விவசாயிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மேலும் தமிழகத்தில் 125 ஆக இருந்த உணவு தானிய கொள்முதல் மையங்களைத் தற்போது முதல்வர் 250 ஆக அதிகப்படுத்தி இருக்கிறார். இதனால் உணவு தானிய சாகுபடியின் கீழ் விவசாயிகள் பெரும் பகுதி வருவாயை ஈட்ட முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கொள்முதல் மையங்கள் காவிரி டெல்டா மாவட்டங்களில் மட்டுமல்லாது, மதுரை போன்ற பிற மாவட்டங்களிலும் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்யும் தானியங்களை அதிகளவு அரசாங்கம் கொள்முதல் செய்துகொள்ளும் என்பதும் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டது. அதிலும் இந்திய அளவில் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும் தொற்றுநோயை கையாள்வது மற்றும் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பது போன்ற நடைமுறைகளிலும் தமிழக அரசு சிறந்து விளங்குகிறது எனக் குறிப்பிட்டுக் காட்டினார்.
மேலும், கொரோனா அறிகுறிகளோடு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்திய அளிவில் பிரத்யேகமாக அம்மா கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். இத்திட்டத்தின்கீழ் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் நபர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவக் குழு சுழற்சி முறையில் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெளிவுப்படுத்தினார்.
கொரோனா அறிகுறியால் வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு கோவிட்-19 வீட்டுப் பராமரிப்பு திட்டத்தின் மூலம் பல்ஸ் பார்க்கும் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பமானி, வைட்டமின் மாத்திரைகள், 14 முகக்கவசங்கள், கிருமிநாசினி அடங்கிய தொகுப்பு வழங்கப்பட இருக்கிறது எனவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். மேலும் ரூ.2,500 செலுத்தி வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் பல்வேறு மருத்துவ பயன்பாடுகளை பெற்றுக்கொள்ளவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments