ஊரடங்கு நேரத்திலும் முதலீட்டில் கலக்கும் தமிழக அரசு!!! தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தாக்கத்தால் இந்தியா மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் மாநில அரசுகளும் நேரடியாக வெளிநாடு, உள்ளூர் வர்த்தகத்தை ஈர்க்கும் வகையில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதையடுத்து தேசிய அளிவில் ஈர்க்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த முதலீடு தொகையைப் பற்றிய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்தப் பட்டியலில் தமிழகம் அதிகபடியான முதலீட்டை பெற்று தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த மார்ச் 23 இரவு முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதில் பல விதிமுறைகள் தளர்த்தப்பட்டாலும் இயல்புநிலை இன்னும் மாறாமல் இருக்கிறது. ஊரடங்கு காலத்திலும் பொருளாதாரத்தைத் திடப்படுத்த வேண்டும் என்பதற்காக அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது ரூ.18,236 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களை ஈர்த்து அத்திட்டங்களை மேற்கொள்ள தமிழக அரசு அனுமதியளித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தேசிய அளவில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக உயர்ந்து இருக்கிறது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல்-ஜுன் வரையில் ரூ. 97,859 கோடி மதிப்பிலான முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் 1241 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட இருக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருககிறது. அதன் மூலம் ரூ.18,236 கோடி முதலீடுகளுக்கு தமிழகத்தில் அனுமதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்தொகை இந்திய அளவுடன் ஒப்பிடும்போது 18. 63 விழுக்காடு என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்தப்படியாக மத்தியப்பிரதேசம் 12 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.11,228 கோடியே 80 லட்சம் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறது. அடுத்தப்படியாக உத்திரபிரதேசம் ரூ.8 ஆயிரத்து 867 கோடியே 80 லட்சம் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்த அளவில் தமிழகம் அதிக முதலீட்டை ஈர்த்து முதல் இடத்தை பிடித்து இருப்பதால் தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments