உழைக்கும் பெண்களுக்கு கைக்கொடுக்கும் தமிழக அரசு!!! இருசக்கர வாகனத்திற்கு மானியத் தொகையை உயர்த்தி அறிவிப்பு!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
உழைக்கும் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அத்திட்டம் தற்போது தமிழகம் முழுவதும் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நிலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு 50% மானியம் அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மற்றும் கடன் தொகையில் இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்படி கடந்த 2018 முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் பெண்களுக்கு மானியத் தொகையில் இருசக்கர வாகனங்கள் கிடைக்க வழிவகைச் செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டு இருந்த அறிவிப்பில் வாகனத்தின் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். இதனால் உழைக்கும் பெண்கள் மானியத் தொகையில் இருசக்கர வாகனங்களைத் தேர்ந்தெடுக்கும்போது உயர்ரக வாகனங்களை தேர்ந்தெடுக்க முடியும் எனப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தின்படி பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், தனியார் நிறுவனங்கள் மறறும் கடைகளில் பணிபுரியும் பெண்கள், சுயத்தொழில் புரியும் சிறு பெண் வணிகர்கள், அரசு உதவிபெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் ஆகியவற்றில் தொகுப்பூதியம்/ தினக்கூலி / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெண்கள் ஆகியோர் பயன்பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், வங்கி வழிநடத்துநர்கள் மற்றம் சமூக சுகாதார பணியாளர்களாகப் பணிபுரியும் பெண்கள், சிறந்த காலமுறை ஊதியம் பெற்று ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்துக்கும் மிகாமல் பணிபுரிந்து வரும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள், கூட்டுறவு சங்கங்கள்/ கடைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் மற்றும் பல்வேறு அரசு துறைகள்/ அரசு சார்ந்த நிறுவனங்கள்/ நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்/ ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து வரும் பெண் பணியாளர்களும் இத்திட்டத்தினால் பயன்பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு தமிழக அரசு மேலும் சில விதிமுறைகளை வகுத்து இருக்கிறது. அதில் பெண்கள் மானியத் தொகையில் இருசக்கர வாகனங்களை தேர்ந்தெடுப்பதற்கு வயது வரம்பு 18 வயதிற்கு மேல்- 45 வயதிற்குள் இருத்தல் வேண்டும். தொலை தூரங்களில் வசிப்பவர்கள், மலைப் பிரதேசங்களில் வசிப்பவர்கள், திருநங்கைகள், குடும்பத் தலைவியாக இருப்பவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர், 35 வயதுக்கு மேல் திருமணம ஆகாதவர்கள், ஆதிதிராவிடர்/ பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout