மறப்போம் மன்னிப்போம்… ஆசிரியர்களுக்கு கைக்கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 17,686 ஆசிரியர்கள் மீது தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் முதல்வர் எடப்பாடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சூறாவளி பிரச்சாரத்தை செய்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக வளர்ச்சிக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அமுலுக்கு கொண்டு வருகிறார். மேலும் தமிழகத்தில் உதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உட்பட 17,686 பேர் மீது தொடரப்பட்டு இருந்த 408 வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.
இதற்கான அறிவிப்பெ வெளியிட்ட போது, ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை மத்திய அரசு ஆணை இட்டவுடன் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் ஊதியக் குழுவை அமைத்து பரிசீலனை செய்து ஒரே மாதத்தில் ஊதிய உயர்வை வழங்கியது அதிமுக அரசு என்பதையும் தமிழக முதல்வர் சுட்டிக் காட்டினார். அதோடு அதிமுக அரசு ஒருபோதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை புறம் தள்ளியது இல்லை எனவும் அவர் தெரிவித்து கொண்டார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments