விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர்: அரசாணை வெளியீடு!

  • IndiaGlitz, [Monday,January 04 2021]

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்னர் நடிகர் சிம்பு கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் அறிவிப்பு தற்போது தமிழக அரசிடம் இருந்து வந்துள்ளது

தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணையை சற்றுமுன் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் தமிழக முதல்வரைச் சந்தித்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதேபோல் சற்று முன்னர் சிம்புவும் இதே வேண்டுகோளை தமிழக முதலமைச்சரிடம் விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு தற்போது இது குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது

இதனை அடுத்து வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும் விஜய்யின் ’மாஸ்டர்’ மற்றும் சிம்புவின் ’ஈஸ்வரன்’ ஆகிய படங்களை பார்க்க வரும் ரசிகர்கள் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் அமர்ந்து படங்களை ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது