அரியலூர் அனிதா சகோதரருக்கு அரசுப்பணி: முதல்வர் வழங்கினார்.
- IndiaGlitz, [Thursday,December 28 2017]
கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா, நீட் தேர்வு காரணமாக மெடிக்கல் சீட் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலை தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்த நிலையில் அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவியும், அவருடைய குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் தருவதாக தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி தற்போது அனிதாவின் சகோதரர் சதிஷ்குமாருக்கு சுகாதாரத்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை இன்று சதீஷ்குமாரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழக அரசின் நிதியுதவி மற்றும் அரசு பணியை அனிதா குடும்பத்தினர் ஏற்கனவே ஏற்க மறுத்திருந்த நிலையில் தற்போது அனிதாவின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அரசு பணியையும், நிவாரண தொகையையும் ஏற்றுக்கொள்ள ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.