ரத்துச் செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும்- தமிழக அரசு விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதேபோல கல்லூரி பருவத்தேர்வை ஒட்டி அரியர் மாணவர்கள் தேர்வெழுத விண்ணப்பித்து இருந்தாலும் அவர்களுக்கும் தேர்ச்சி என மற்றொரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிட்டு இருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பை யுஜிசி ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்ததோடு எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி அறிவித்ததைக் குறித்து பல தரப்புகளில் இருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதேபோல சென்னை அண்ணா பல்கலைக்கழக்ததின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமியும் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தனும் அரியர் மாணவர்களின் தேர்ச்சியை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருந்தனர்.
இந்த வழக்கின் பல்வேறுகட்ட விசாரணைக்குப் பின்னர் அரியர் மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்து உள்ளது. மேலும் அரியர் மாணவர்கள் ஒருவேளை ஆன்லைனில் தேர்வுகளை எழுதவில்லை என்றால் அவர்கள் தேர்ச்சிப் பெற்றவர்களாக அறிவிக்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தையும் தமிழக அரசு அளித்துள்ளது.
இந்த விசாரணையின்போது அரியர் மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் மூலம் தேர்வு வைக்கப்படும் எனத் தமிழக அரசு கூறிய விளக்கத்திற்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் 8 வாரத்திற்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே ஆன்லைனில் தேர்வுகளை எழுதிய மாணவர்களுக்கு உடனடியாக சான்றிதழ்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
மேலும் இதுகுறித்த அறிக்கையை 2 வாரத்திற்குள் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஜுலை மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout