நாளை மற்றும் நாளை மறுநாள் அரசு நிகழ்ச்சிகள் ரத்து

  • IndiaGlitz, [Tuesday,August 07 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமாக கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் மூடப்பட்டு அலுவலகர்கள் வேகவேகமாக வீடு சென்று கொண்டிருக்கின்றனர்.

இன்றும், நாளையும் திரையரங்குகள் மூடப்படும் என்றும், சினிமா நிகழ்ச்சிகள், படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என்றும் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற திட்டமிட்ட அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட உத்தரவிட்டுள்ளதை அடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளது. அசாதாரண நிலையை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More News

திரையரங்குகள் மூடல்: நாளைய காட்சிகளும் ரத்து

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அறிக்கை சற்றுமுன் வெளியானதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் அசாதாரணமான நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வருடன் தலைமைச்செயலாளர் திடீர் சந்திப்பு: டிஜிபியின் முக்கிய உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நேற்று மாலையில் இருந்து தொடர்ந்து பின்னடைவில் இருந்து வரும் நிலையில் தமிழக டிஜிபி முக்கிய உத்தரவு ஒன்றை சற்றுமுன் பிறப்பித்துள்ளர்.

இன்னும் அரை மணி நேரத்தில் கருணாநிதி குறித்த மருத்துவ அறிக்கை: பரபரப்பில் தமிழகம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக நேற்று மாலை செய்தி வந்ததில் இருந்தே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரபரப்பில் உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஸ்டாலின், அழகிரி திடீர் சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதி கடந்த 11 நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

எம்.எல்.ஏ ஆகிறார் நடிகர் சூர்யா

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே. திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சமீபத்தில் தொடங்கி இரவுபகலாக நடந்து வருகிறது.